பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் நயவஞ்சக்காரருக்கு நாசம் வந்ததே" என்றும் குரு கோவிந்தர் என்னும் பாடலில் "ஆரிய சாதியுள் ஆயிரம் சாதி வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவீரும் தருமம், கடவுள், சத்தியம், சுதந்திரம் என்பவை போற்ற எழுந்திடும் வீரச் சாதி ஒன்றனையே சார்ந்தோராவீர்" என்றும் கூறுகிறார். "பாப்பா" பாட்டில் பாரதி "சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்" எனவும் முரசுப் பாட்டில் 'நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச்சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சக்தி" என்றும், "சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம்-தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்" என்றும் முரசு கொட்டுகிறார். "உயிர் பெற்ற தமிழர்' என்னும் தலைப்பில் "மனிதரில் ஆயிரம் சாதி - என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை" எனவும், "ஒன்றுண்டு மானிட சாதி - பயின்று உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்" என்றும், "நந்தனைப் போல் ஒரு பார்ப்பான்-இந்த நாட்டினில் இல்லை குணம் நல்ல தாயின் எந்தக் குலத்தினரேனும் -உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்" என்றும், "சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச் சோறு ண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி எனச் சாத்திரம் சொல்லிடுமாயின்-அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்" என்றும் தெளிவுப் படுத்திக் கூறுகிறார். சாத்திரச்சதி என்றும் போலிச்சுவடிகள் என்றும் முதன் முதலில் எடுத்துக் கூறியவர் மகாகவி பாரதி தான். மேலும் பாரதி பேசுகிறார். முன்னர் தோன்றிய சாத்திரங்களைப் பயிலும் போது, காலத்திற்கேற்ற வகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் கொள்கை. "பின்னும் பல ஸ்மிருதிகள் செய்தார். அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை மன்னும் இயல்பினவல்ல - இவை மாறிப் பயிலும் இயல்பினவாகும்" என்றும் குறிப்பிடுகிறார். "குணத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணங்களைப் படைத்தேன்" என்று கண்ணபிரான் கூறிய பின்னர், வர்ணங்கள் என்பது எப்படி பின்னா