பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாட்டுத் தளத்தில் பாரதி - ஆ. சீனிவாசன் של עופשי ப்புக் காட்டி உணர்ச்சி பொங்கப் பேசுகிறார். நாட்டுப் பாடல்களிலோ, த் தலைவர்களைப் பற்றிய பாடல்களிலோ மற்றும் இதர பாடல்களிலோ நமது புராணங்கள் இதிகாசங்கள் கதைகளில் வரும் தெய்வீகப் பத்திரங்களைக் குறிப்பிட்டு மிகுந்த ஈடுபாட்டுடன் பாரதி பாடுவதைக் பண்கிறோம். இராமன், இலக்குவன், பரதன், கண்ணன், வீட்டுமான், தர்மன், அர்ஜுனன், பீமன், கர்ணன், இந்திர சித்தன் முதலிய பல பாத்திரங்களும் வடிவங்களும் பாரதியின் கண் முன் வந்து நிற்கின்றனர். அவர்களை பாரதி வெறும் கதாபாத்திரங்களாகக் காணவில்லை. பாரத நாட்டின் தலை சிறந்த, பெருமைக்கும் வணக்கத்திற்கும் உரிய நடமாடும் சின்னங்களாகக் காண்கிறான். இராமனுடைய முழுமையான தெய்வீக மனித வடிவம், அர்ஜுனனுடைய வீரம். வீட்டுமனுடைய அளப்பரிய தியாகம், தருமனுடைய அறம் ஆகியவைகளைப் பாரதத் தாயின் வடிவங்களாக, குணச் சிறப்புகளாகக் காண்கிறான். நமது நாட்டுப் பெரியார்களின் அறிவு. கல்வி, ஆற்றல், வீரம், அன்பு,கருணை, செல்வங்கள் முதலிய சகல சிறப்புகளையும் பாரத தேவியின் விஸ்வரூபத்தில் பாரதி காண்கிறார். அதுவே அவர் காணும் பாரதப் பண்பாட்டுத் தளம். தேசபக்திப் பாடல்களை நூலாக வெளியிட்டு அதைச் சமர்ப்பிக்கும்போது 'பரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கியதை ஒப்ப எனக்கு பாரத தேவியின் சம்பூரண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் சாண மலர்களில் இச்சிறு நூலை சமர்ப்பிக்கிறேன்" என்று பாரதி கூறியுள்ளதை இங்கு மீண்டும் நினைவு கொள்கிறோம். "மாரத வீரர் மலிந்த நன்னாடு மாமுனி வோர் பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கானம் நலம் திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம் பெரும் நாடே" என்று பாரத நாடு உலகிலேயே ஓர் இணையற்ற நாடாக பாரதிக்குக் காட்சி தருகிறது. பாரத மாதா என்னும் தலைப்பில் தாயின் வீரம், தெய்வத்தன்மை, கைத்திறன், சொல் சிறப்பு, ஒளி, தோள் வலி, கொடைச்சிறப்பு, ஞானம் புகன்ற திருவாய் மகிமை, தியாக உள்ளம், மொழி உயர்வு மதியூகம், அருள். கவிதைத்திறன் ஆகியவைகளை பாரதி தெய்வீகப் பாத்திரச்சிறப்புகள் மூலம் வடித்துக் காட்டும் தனிச் சிறப்பைக் காணலாம். இராமாயணத்தில் இலங்கை நகரம், செல்வச் செழிப்பிலும், நாகரிக வளர்ச்சியிலும், கல்வி சிறப்பிலும், போர்ப் பயிற்சியிலும், இசைஞானத்திலும், படை வல்லமையிலும் சிறந்த நாடாக விளங்கியது. அந்நகரை ஆண்ட இராவணன் யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவனாக இருந்தான். பஞ்சபூத சக்திகளும் அவனுடைய ஆணைக்கு அடங்கியிருந்தன. முக்கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெரும் தவ பலமும், எக்கோடி யாராலும் வெலப்படாய் என்று உயர்ந்த வரங்களின் பலமும்,"கோட்டைபலமும், ஆயுத பலமும், ஆண்மையும், வீரமும், வல்லமையும் கொண்டவனாக இருந்தான். ஆயினும் தன்னகங்காரத்தின் உச்சத்திலும் அதர்மமும் இரக்க மற்ற அரக்கத்தனமும் கொண்டவனாக இருந்த காரணத்தினால் போரில் அழிந்தான். இலங்கை அரசனைப் போரில் வென்றான் இராமன். அப்போரில் இராமன் சாதாரண மனித வடிவில் வானரப்படைகளை வைத்து இலங்கையை அழித்தான் என்பது அரசியலில் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். "குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்திய, அரங்கத்திலே திருமாதுடன் பள்ளி கொண்டான் மருகா" என்று விநாயகரைப் பாடுகிறார் மகாகவி பாரதி. இந்த பாடல் வரிகள் பொருள் பொதிந்தனவாகும். "நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நலம் புரிவாள் எங்கள் தாய் - அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்' என்பதுதான் பாரதத் தாயின் இயல்பாகவே பாரதி காண்கிறான். எனவே, "முன்னை இலங்கை அரக்கர் அழிய முடித்த வில் யாருடைய வில் - எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி நல் ஆரிய ராணியின் வில்"