பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"le rann. Si zmizornost » ferenz:: உறு கனையொன்றே பார்த்தன்மேல் தொடுப்பன் உய்த்துளோர் உய்வர் என்றுரைத்தான் தறுகணலர்க்கும் தருகண் ஆனவாக்கும் தண்ணளி நிறைந்த செங்கண்ணான்" ான்று தனது தாய் கேட்டதானங்களை எந்த விதமானபேதமும் காட்டாமல் பாம் உவந்து கொடுத்தான் மாவீரன் கர்ணன். தருகணர் அலர்க்கும் தரு கண் ஆனவர்க்கும் தண்ணளி நிறைந்த செங்கண்ணான் என்பது, நல்லவர்களுக்கும் அல்லவர்களுக்கும் வேறுபாடின்றி அருள் புரிந்து கொடையளிக்கும் சிவந்த கண்களையுடைய பான் என்பது வில்லியின் வாக்காகும். கர்ணனுக்கு உடலோடு கவசமும் காதோடு குண்டலமும் உடன் பிறந்தவை. அவை அவனுடைய உடலில் இருக்கும் வரை அவனுக்கு உயிருக்கு ஆபத்தில்லை. அவனை யாரும் கொல்ல முடியாது. அவனுடைய கவச குண்டலங்கள் அவனுடைய உயிருக்குப் பாதுகாப்பாக இருந்தன. ாவே கர்ணனிடம் அவனுடைய கவச குண்டலங்கள் இருக்கும் வரை அவனைப் பார்த்தனால் கொல்ல முடியாது. எனவே கண்ணன் அதற்காக மற்றொரு தந்திரத்தைச் செய்கிறான். கண்ணன் இந்திரனை அழைத்து மாறு வேடத்தில் கர்ணனிடம் சென்று அவனுடைய கவச குண்டலங்களை யாசித்துப் பெறுமாறு கூறுகிறான். அவ்வாறே இந்திரன் தனது மகன் அர்ஜுனனுடைய வெற்றிக்காக மாறுவேடத்தில் கர்ணனிடம் சென்று கவச குண்டலங்களை தானமாகக் கேட்கிறான். சூரியனுடைய அசரீறு கவச குண்டலங்களைக் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தது. அதையும் பொருட் படுத்தாது கர்ணன் தானம் கேட்டவனுக்குத் தனது கவச iனடலங்களையும் கொடுத்துவிட்டான்.சாகும்பொழுதிலும் கர்ணனுடைய 3. உள்ளத்தைக் கண்டு இந்திரனும் ஆச்சரியமடைந்து அவனைப் பாராட்டுகிறான். இன்னும் கர்ணனது கொடைச் சிறப்பின் சிகரத்தை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. கர்ணனுடைய சக்தி ஆயுதங்கள் பலவும் தீர்ந்து விட்டன. அவனது உயிருக்குப் பாதுகாப்பாக இருந்த கவச குண்டலங்களும் இந்திரனுக்குத் தானமாகப் போய் விட்டன. கர்ணன் கற்றிருந்த வித்தைகள் பலவும் அவனது குருவான பரசுராமனின் சாபத்தால் அவ்வப்போது நினைவுக்கு வராமல் போகிறது. அர்ஜுனனுடைய சாரதி கண்ணன் மிகவும் திறமையாக சாதுர்யமாகத் தேரையும் செலுத்திக்கொண்டு பார்த்தனுக்குப் பல நல்ல ஆலோசனைகளையும் கூறி வழி காட்டிக் கொண்டிருக்கிறான். 33 கர்னனுக்குக் கடைசி நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திடீரென்று போர்க்களத்தில் கர்ணனுடைய தேர்ச் சக்கரம் பூமியில் பதிந்து விட்டது. தேரிலிருந்து இறங்கிக் கர்னன் தனது தோள்களில் தேர்ச்சக்கரத்தைத் தாங்கித் தேரைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறான். அந்த நேரத்தில் அவன் மீது கனைகளை ஏவுமாறு கண்ணன் பார்த்தனுக்கு வழி காட்டுகிறான். பார்த்தனும் அம்புகளை ஏவுகிறான். ஆனால் அந்த அம்புகள் எல்லாம் கர்ணனுடைய புண்ணியத்தின் முன் தலை வணங்கி மலர்களாக மாறுகின்றன. கண்ணன் தனது தேரை நிறுத்தி விட்டு ஒரு ஏழை அந்தணன் வேடத்தில், மண்ணில் பதிந்திருந்த தேர்ச் சக்கரத்தைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொண்டிருந்த கர்ணனிடம் போய் யாசகம் கேட்கிறான். தான் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு உதவி கேட்டு யாசித்தான். அப்போது கர்ணனுடைய கண்கள் கலங்குகின்றன. அவனது உடம்பில் தைத்த அம்புகளால் ஏற்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. நான் அந்திமக் காலத்தில் நிச்சயமற்ற நிலையில் போர்க்களத்தில் இருக்கிறேன். எனது ஆவி அகத்ததோ புறத்ததோ அறியேன். உனக்கு உதவி செய்யும் பக்குவ நிலையில் நான் இருக்கும் போது நீ வந்திருக்கக் கூடாதா? என்னிடம் இப்போது எதுவும் இல்லையே எனது புண்ணியம் மட்டும் தானே இருக்கிறது" என்று கர்ணன் கண் கலங்கிக் கூறுகிறான். அந்தப் புண்ணியத்தையே தானமாகத் தருமாறு அந்தப் பிராமணவேடக் கண்ணன் கேட்டுக் கொள்கிறான். கர்ணன் பெருமகிழ்ச்சியடைந்து தனது உடம்பில் தைத்திருந்த அம்பினை உருவி அதிலிருந்து வடிந்த இரத்தத்தைத் தாரை வார்த்துக்கொடுத்துத் தனது புண்ணியமனைத்தையும் யாசித்து வந்த கண்ணனுக்குக் கொடுத்து விட்டான். கர்ணனுடைய புண்ணியமனைத்தையும் பெற்றுக் கொண்ட கண்ணன் பெரும் மகிழ்ச்சியடைந்து தனது நாராயணப் பெரு வடிவத்தை, உலக பெரு வடிவத்தை விஸ்வரூபத்தைக் காட்டிக் கர்ணனைக் கட்டித் தழுவி அன்பு நீர் சொரிந்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறினான். அதற்குக் கர்ணன் ஆனந்தக் கண்ணி விட்டு நான் ஏழேழு பிறவி எடுத்தாலும் இல்லையென்று வருபவர்களுக்கு இல்லையென்று கூறாத இதயம் வேண்டுமென்று கேட்டான். கண்ணன் பெருமகிழ்ச்சியடைந்து எத்தனை பிறவி எடுத்தாலும் ஈகையும் பொருளும் பெற்று இறுதியில் முக்தியும் பெறுவாயாக என்று வாழ்த்தி வரம் கொடுத்து மீண்டான். அதன் பின்னர் தனது புண்ணியத்தை இழந்து தனியனாக நின்ற கர்ணன் மீது விஜயன் தனது கணையை ஏவி கர்ணனது ஆவி பிரிந்தது. சாகும் பொழுதில் இரு செவிக் குண்டலம்