பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி-அ. சீனிவாசன் கீதையுரைத் தெனை இன்புறச் செய்தவன் கீர்த்திகத்ள் வாழ்ந்திடுவேன்" ான்று மகாகவி பாரதி கண்ணனுடைய கீர்த்திகளைப் பாடுகிறான். கண்ணன் எனும் தாய் "உண்ண உண்ணத் தெவிட்டாதே.-அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால் வண்ண முற வந்தெனக்கே - என்றான் வாயினில் கொண்டு ஊட்டுமோர் வண்மையுடையாள்" ானறு தொடங்கி, "கண்ணன் எனும் பெயருடையாள் - என்னைக் கட்டி நிறைவாள் எந்தன் கையில் அனைத்து. மண்ணெனும் தன் மடியில் வைத்தே - பல மாய முறுங்கதை சொல்லி மனங்களிப்பாள்" ான்று மேலும் தொடர்கிறான். "இன்பமெனச் சில கதைகள் எனக்கு ஏற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள், துன்பமெனச் சில கதைகள், கெட்ட தோல்வி என்றும் வீழ்ச்சி ான்றும் சில கதைகள் முதலியவற்றை எனது பருவம், எனது விருப்பம் ாண்பதற்கிணங்க அன்புடன் சொல்லி என்னை மகிழ்விப்பாள்" என்றும் படுகிறார் மகாகவி, விந்தை விந்தையாக உலகின் பலவிதத் தோற்றங்களைக் காண்பித்தாள். சந்திரன், அதன் அமுதம் போன்ற ஒளி, மந்தை மந்தையாக மேகங்கள், அவை பொழியும் மழை, சூரியன், அதன் பேரொளி, வானத்து மீன்கள், அவை மின்னும் அழகு, கானத்து மலைகள், அவை இடம் பெயராது மோனத்தில் இருக்கும் அழகு நல்ல நல்ல நதிகள், அவை நாடெங்கும் ஓடி வரும் நல்ல காட்சி, அவை போய் விழும் விரிகடல், அதன் எல்லையற்ற காட்சி, அதன் அலைகள், அவைகளில் ஓம் எனும் ஒலி, சோலைகள், காவினங்கள், அங்குள்ள இனிய மணிமலர்கள், அங்கு தொங்கும் கனிவகைகள் முதலியனவற்றைக் கோடி கோடியாக எனக்குக் காட்டினாள். நின்றிடப் பண்டங்கள், செவிக்கினிய நல்ல பாட்டுகள், சேர்ந்து விளையாட மெய்த் தோழர்கள், நன்றியல் காதலுக்கு நல்ல நாரியர், இறகுடைப் பறவைகள், நிலத்தில் திரிந்திடும் விலங்குகள், ஊர்வனகள், H} கடல் நிறைந்த பல்வகைச் சுறவுகள், மீன் வகைகள் முதலிய பலவகைத் தோழர்களையும் எனக்குக் காட்டினாள். அதில் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. 'கோடி கோடி சாத்திரங்கள் அதினுள் ஞானம், அத்துடன் நகைப் பிற்கிடமான பல பொய் வேதங்கள், மதக் கொலைகள், அரசர்களின் கூத்துகள், மூத்தவர் பொய் நடை, சில மூடர்களின் கவலை முதலியவைகளையும் புனைந்து வைத்தாள்' என்று மகாகவி கூறுகிறார். கண்ணன் எனது தாய் என்னும் தலைப்பில் பாரதியார் பாடியுள்ள இந்தக் கவிதை மிக அற்புதமானது. கடைசியில் என்னை ஆண்டருள் புரிந்திடுவாள். அண்ணன் அர்ஜுனன் போல் என்னை ஆக்கிடுவாள். புகழும் பெருமையும் அவள் கொடுப்பாள் என்று கவிதையை முடித்துள்ளது மிகவும் அருமையாக அமைந்துள்ளது. கண்ணன் என் தந்தை தந்தை கண்ணன் என்னை பூமிக்கு அனுப்பினார். அங்கு எனது தம்பிமார்கள் இருந்தனர். எங்கள் இனத்தார்.அங்கு தங்கள் மனம் போல இருந்து ஆண்டு வந்தனர். இப்பூமியில் செல்வங்களுக்கோர் குறைவில்லை. எல்லா செல்வங்களும் உள்ளன. அளவில்லா பொற்குவியல்களை எனது தந்தை சேமித்து வைத்திருந்தான். அவன் கல்வியில் பெரியோன். அவனுடைய கவிதைகளில் இனிமைக்கோர் அளவில்லை. அவனிடம் பலவகை மாண்புகள் இருந்தன. எனினும் அவனிடம் அடிக்கடி பயித்தியம் தோன்றும். நல்வழியில் செல்பவர்களைப் பல சோதனைகளுக்குள்ளாக்கி மனம் நொந்து போகும் அளவிற்குக் கொண்டு சென்று விடுவான். அவனுக்கு மூவகைப் பெயர்கள் உண்டு. இந்த உண்மை அறியாதவர்கள் அவர்களுக்குள் சண்டையடித்துக் கொள்கிறார்கள். கண்ணன், 'பிறந்தது மறக் குலத்தில் - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக் குலத்தில் சிறந்தது பார்ப்பனருள்ளே - சில செட்டி மக்களோடு மிகப்பழக்க முண்டு நிறத்தினிலே கருமை கொண்டோன் - அவன் நேய முறைக் களிப்பது பொன்னிறப் பெண்கள்,