பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடு மென்பான்" ான்றும், "இன்பத்தை எண்ணுபவர்க்கே - என்றும் இன்பம் மிகத் தருவதில் இன்பமுடையான்" ான்று இக்கவிதை வரிகளை இனிது முடிக்கிறார் பாரதியார். கண்ணன்- என் சேவகன் கண்ணன் என் சேவகன் என்னும் கவிதை மிகவும் அற்புதமான ஒரு சிறந்த -தையாகும். அக்கவிதை மூலம் பாரதி கூறியுள்ள கருத்துக்கள் தினசரி மக்கு ஏற்படும் அனுபவங்களாகும்.உழைப்பின்மேன்மை, அதன் தெய்வீகத் தன்மை ஆகியவற்றை அற்புதமான முறையில் பாரதி கூறியிருப்பது அவருடைய தனித்தன்மையான சிறப்பிற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். கவிதை முழுவதிலும், பக்திரசம், இழையோடியிருப்பதையும் நாம் காண முடிகிறது. பச்சையான சில உண்மைகளை நாடக பாணியில் நகைச்சுவையுடன் இலக்கிய ரசனையுடன் உள்ள தத்துவ நெறி நிறைந்த இந்த வரிகள் பாரதியின் அற்புதமான படைப்புகளில் ஒன்றாகும். "கூலி மிகக் கேட்பார் கொடுத்த தெலாம் தாம் மறப்பார், வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார். ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லையென்றால் பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்த தென்பார், வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்ததென்பார். பாட்டியார் செத்து விட்ட பனிரெண்டாம் நாளென்பார்" "ஓயாமல் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்க வேறு செய்வார் தாயாதி யோடு தனியிடத்தே பேசி டுவார், உள் வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார் எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசரைவார் சேவகரால் பட்ட சிரமம் மிகவுண்டு கண்டீர் சேவகர் இல்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை" ான்று பாரதி உண்மை நிலையை மிகவும் நகைச்சுவையுடன் நுண் புலத்துடன் கவிதையைத் தொடங்கி, "எங்கிருந்தோ வந்தான், இடைச் சாதி நான் என்றான்'

  • 11

என்று பக்தி ரசம் ததும்பக் கவிதையைத் தொடர்கிறார். 'மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன் வீடு பெருக்கி விளக்கேற்றி வைத் திடுவேன், சொன்னபடி கேட்பேன், துணி மணிகள் காத்திடுவேன், சின்னக்குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த் திடுவேன்." "காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும் இரவிற் பகலிலே எந்நேர மானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவர் தம்முடனே சுற்றுவேன், தங்களுக்கோர் துன்ப முறாமல் காப்பேன் கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே, ஆன பொழுதும், கோலடி, குத்துப் போர்மற்போர் நானறிவேன் சற்றும் நய வஞ்சனையும் புரியேன் என்று பல சொல்லி நின்றான்." என்று அக்கண்ணன் கூறியதாக பாரதி குறிப்பிடுகிறார். அக்கண்ணனை நான "ஆளாகக் கொண்டு விட்டேன், அன்று முதற் கொண்டு நாளாக நாளாக நம்மிடத்தே கண் னனுக்கு, பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால் பெற்றுவரும் நன்மை யெல்லாம் பேசி முடியாது" என்று பெருமையுடன் தொடங்கி,