பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் வான் முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும் அறிதுயில் போய் மற்றாங்கே ஆழ்ந்த துயிலெய்தி விட செறிதரு நற் சீரழகு செல்வமெலாம் தானாகும் சீதேவி தன்வதனம் செம்மை போய்க் காரடைய மாதேவன் யோகம் மதி மயக்கமாகி விட வாலை, உமாதேவி, மாகாளி வீறுடையாள்" 'மூலமா சக்தியொரு மூவிலை வேல் கையேற்றாள் மாயை தொலைக்கு மகாமாயை தானா வாள் பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள் சிங்கத்திலேறிச்சிரித் தெவையும் காத்திடுவாள் நோவுங் கொலையுநுவலொனராப் பீடைகளும் சாவும் சலிப்பு மெனத்தான் பல் கன முடையாள்" "கடா வெறுமையேறுங் கரு நிறத்தக் காலனார் இடாது பணி செய்ய இலங்கு மகாராணி மங்களஞ் செல்வம் வளர வாழ் நாள் நற்கீர்த்தி துங்க முறுகல்வி யெனச் சூழும் பல் கணத்தாள் ஆக்கந்தாணாவாள் அழிவு நிலை யாவாள் போக்குவர வெய்தும் புதுமை யெலாம் தானாவாள் மாறி மாறிப் பின்னு மாறி மாறிப் பின்னும் மாறி மாறிப்போம் வழக்கமே தானாவாள் ஆதி பராசக்தி - அவனெஞ்சம் வண்மையுற சோதிக் கதிர் விடுக்கும் சூரியனாம் தெய்வத்தின் முகத்தேயிருள் படர" என்பது பாரதியாரின் சிறப்பு மிக்க நீண்ட கவிதை வரிகளாகும். உலகில் அக்கிரமங்களும் அநியாயங்களும் அதிகரிக்கும் போது ஆண்டவன் தலையிட்டு அதைத் தடுக்கவேண்டும். அது தாமதமாகும்போது துன்பங்கள் அதிகரிக்கின்றன. அப்போது ஆண்டவனை நிந்தித்துப்பாடுவதும் பக்தியின் சிகரங்களில் ஒன்றாகும். பாரதியின் இந்த பாணி தனிச் சிறப்பாக வடிவம் பெற்றுத் திகழ்வதைக் காண்கிறோம். ஒரு இடத்தில் ஒரு ஊரில், ஒருநாட்டில் அக்கிரமங்களும் அநியாயங்களும் கொடுமைகளும் நடக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது 5 கண்டனத்துக்குரியதாகும். அது கோழைத்தனம். அதைக் கவிஞன் சாடுகிறான். அரசன் தவறு செய்யும் போது அதை இடித்துரைப்பது சுட்டிக், காட்டித் திருத்துவது என்பது நமது நாட்டின் ராஜ நீதியின் அரசியல் இலக்கணத்தின் நெறியாகும். சீதையை இராவணன் கவர்ந்து கொண்டு செல்லும் போது அதைக் கண் சடாயு, அரக்கனை எதிர்த்துப் போரிட்டான். இராவணனுடைய செய்கையை அவனுடைய தாய் வழிப்பாட்டனான மாலியவானும் "வேறு ஒரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ? பாவியர் உறும் பழி, இதன் பழியும் உண்டோ?' என்று கூறுகிறான். அனுமன் இராவணனுடைய சபையில் தூதுரைத்து முடித்த போது, இலங்கையில் புகுந்து அரக்கர்களைக் கொன்ற காரணத்திற்காக "இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்" என்று இராவணன் ஆணையிட்டான். அதைக் கேட்ட வீடணன் உடனே தலையிட்டு, "நில்லுங்கள், தூதரைக் கொல்லுதல் அரச நீதியன்று' என எடுத்துக் கூறினான். அதை இராவணன் ஏற்றுக் கொண்டு. இந்தக் குரங்கின் வாலில் தீயை வைத்து அடித்து விரட்டுங்கள் என்று கூறி முடித்தான். ஒரு தூதன் அவன் என்ன தவறு செய்திருதாலும் அவனுக்கு மரண தண்டனை கொடுப்பது இராஜ நீதியன்று. குறைவான தண்டனை கொடுக்கலாம். அதை இராவணன் ஏற்றுக் கொண்டு தூது வந்த அனுமனுக்கு மரண தண்டனை இல்லாமல் குறைந்த தண்டனை கொடுக்கப் படுகிறது. இங்கு அண்ணன்துரியோதனன் ஆணையிட, அவன் தம்பிதுர்ச்சாதனன், பாஞ்சாலி தங்கிருந்த அந்தப்புற அறைக்குச் சென்று அவளுடைய ஆட்சேபனைகளையும் காதில் கொள்ளாமல் அவள் பக்கத்தில் சென்று அவளுடைய கூந்தலினைப் பற்றி அத்தினாபுரத்துத் தெருக்களின் வழியாகக் கரகரவென இருத்துச் சென்றான். அப்போது அதைப் பார்த்து ஊரவர் என்ன கொடுமையிது என்று கூட்டமாக நின்று வேடிக்கைதான் பார்த்தனர் என்று பாரதி கடுங்கோபத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அத்தினாபுரத்து மக்களைத் திட்டுகிறான். அந்தக் கொடுஞ் செயல் புரிந்த துர்ச்சாதனனைத் தடுத்து அவனை மிதித்துத் தள்ளி விட்டுப் பாஞ்சாலியை அந்தப்புரத்தில் கொண்டு போய்ச் சேர்க்காமல் அத்தினாபுரத்துத் தெருக்களில் கூடியிருந்த மக்கள், "நெட்டை மரங்களைப் போல் நின்று பெட்டைப் புலம்பல் புலம்பினர் என் றும் வீர மிலா நாய்கள் என்றெல்லாம்" கடுஞ் சொற்களில் பாரதி சாடுகிறான். "ஐயகோ வென்றே அலறி யுணர்வற்றுப்