பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் பற்றை கள் போல் நிற்பதைப் பார்த்து வெறி கொண்டு தாதியடி தாதி யெனத்துச் சாதனன் அவளைத் தீதுரைகள் கூறினான், கர்ணன் சிரித்திட்டான், சகுனி புகழ்ந்தான் சபையோர் வீற்றிருந்தார்." என்று பாரதி குறிப்பிடுகிறார். பாஞ்சாலி சூதோர் சபையில் வாதிட்டு அலறிய அந்த அவலக் காட்சியில் அடுத்த திருப்பம் பெண்ணடிமை, பெண்ணுரிமை பற்றிய ஒரு கடும் வாதம். பிதாமகர் வீட்டுமனுக்கும் பாதிக்கப் பட்ட பாஞ்சாலிக்கும் நடக்கிறது. இந்த வாதத்தின் வரிகளில் பாரதியின் உள்ளத்தைக் காணலாம். விட்டுமன் கூறும் சாத்திர வாதமும் அதற்கு பதிலளித்து பாஞ்சாலி கூறும் சத்திய வாதமும் உரிமைக் குரலும் பதில் வாதமும் வீமனின் துடிப்பு விஜயனின் சத்தியக் குரலும், பாட்டனுக்கு பதிலளித்து விகர்ணன் கூறிய மறுப்புகளும் மரபுவழியில் விவாதிக்கப்பட்ட ஒரு பேரிலக்கியமாகும். பாரதி சிந்தனையின் கவியுள்ளத்தின் தனித் தன்மை பெற்ற இந்தப் பேரிலக்கியம் தலை சிறந்த இந்தக் காவியத்தின்மய்யமான கருத்தாகவும் அமைந்துள்ளது. இந்த மரபுகளையும் பண்பீடுகளையும் மீறி துகிலுறிதல் கொடுமை நிகழ்கிறது. கண்ணனின் கருணை மழை கண்டோரை வியக்கச்செய்யும் அதி அற்புத நிகழ்ச்சியாக அமைகிறது. கொடுமையை எதிர்த்து பழிக்குப் பழி என சபதங்கள் எழுகின்றன. அச்சபதங்கள் பெரும்போருக்கு வித்திடுகிறது. போர் விழைகிறது. சபதம் நிறைவேறுகிறது. காலம் காலமாக யுக யுகாந்திரமாகபாரத மக்கள் இந்த வீரக் கதைகளைக் கேட்டுக் கேட்டுத்திரும்பத்திரும்பக் கேட்டு தெவிட்டாத சிந்தனை வளமும், நீதி நெறியும் ஒழுக்கமும் மேன்மையும் பெற்று பாரத சமுதாயம் சிரஞ்சீவியாக எத்தனை இன்னல்கள் வந்துற்றாலும் அவைகளைத் தாங்கி நின்று முன் சென்று கொண்டிருக்கிறது. "தகுதியுயர் வீட்டுமெனும் சொல்லுகிறான்" எனத் தனது வாதங்களைப் பிதாமகர் தொடங்குவதைப் பாரதி குறிப்பிடுகிறார். சபையில் மூத்தவர் பிதாமகர் வீட்டுமன், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் பாட்டன். சகல வேதங்களையும் சாத்திரங்களையும் நீதிமுறைகளையும் கற்றறிந்தவர். ராஜ நீதியையும் அரசியல் நெறி முறைகளையும் பற்றி முற்றிலும் தெளிவாக அறிந்தவர். புரிந்து கொண்டவர். போரில் வல்லவர். யாராலும் வெல்ல முடியாத வல்லமை மிக்கவர்.தனக்குத்தானே விரும்பாமல் அவருக்குமரனம் நேராது என வரம் பெற்றவர்.அதாவது அவர் விரும்பும் போதுதான் அவருக்கு மரணம் ஏற்படும் என்னும் வரம் பெற்றவர். அத்தினாபுரத்தைக் கடைசி வரை தனது வலிமையால் பேணிக்காக்கக் கங்கனம் பூண்டவர். நியாயம் எது, அநியாயம் எது என்பதையும் தர்மம் எது அதர்மம் நன்கு அறிந்தவர், தெரிந்தவர் என்றாலும் திருதராட்டிரன் புத்திர பாசத்தால் துரியோதனனுடைய வற்புறுத்தலுக்கு இணங்கியதைப் போல அத்தினாபுரத்து நாட்டு விஸ்வாசத்தால் கவுரவர்களின் செயல்களுக்குதுணைபோகும் சூழ்நிலைக்கு வீட்டுமனார் கட்டுப்பட்டு நின்றாரோ? எந்தத் தன்னலமும் இல்லாமல், யாரை நம்பியும் இல்லாமல் உலகில் தனக்கென எதுவும் இல்லாத தியாக சீலராக அறத்தின் பால் நின்று நீதியையும் நியாயத்தையும் எடுத்துக் கூறுவதற்கு எல்லாத் தகுதிகளையும் படைத்திருந்த பிதாமகர் வீட்டுமனார் நியாயத்தின் பக்கம் நிற்காமல் போனது ஏன்? விதுரன், அனைத்து நீதிகளையும் அறநெறிகளையும் நன்கறிந்த அந்த மகாத்மா விதுரர். ஓர் போர் நிகழ்ந்து அத்தினாபுரம் அழியாதிருக்க அத்தனை ஆலோசனைகளையும் நெறிமுறைகளையும் எடுத்துக் கூறியதை முழுதும் கேட்ட பின்னரும் அந்த தியாகச் செம்மல் பிதாமகனார் மவுனம் சாதித்தது ஏன்? அது ஒரு புதிரேயாகும். எந்தப் பாசத்திற்கும் இடம் தராததியாக உள்ளம் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத பாசத்திற்கு உட்பட்டது ஏன்? கட்டுண்ட பாஞ்சாலி பிதாமகரை நோக்கிக் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள். மெளனமாக இருந்த வீட்டுமனின் மெளனம் கலைந்து பிதாமகர் பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சு சபையில் நடந்த அக்கிரமங்களையும் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்டகொடுமைகளையும் அவர் நியாயப் படுத்துவதைப் போல் இருந்தது. அவர் பேசியது.இன்னும் புதிராக அமைந்திருந்தது. வீட்டுமனின் சொற்களில் தேசீய இயக்கத்தில் மிதவாதத் தலைவர்களின் பேச்சுக்கள் போல் பாரதிக்குத் தோன்றியது போலும். புதுச்சேரியில் பாரதி வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பாஞ்சாலி சபதம் என்னும் இந்த அற்புதமான காவியத்தை இந்த அமரகாவியத்தை எழுதினார். வீட்டுமன் கூறிய வாதத்தைத் தொடங்குகிறார். "தகுதியுயர் வீட்டுமனும் சொல்கிறான். தையலே சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்று விட்டான், வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய் குதிலே வல்லான் சகுனி தொழில் வலியால்" "மாதரசே நின்னுடைய மன்னவனை வீழ்த்தி விட்டான் மற்றிதனில் உன்னையொரு பந்தயமா வைத்ததே குற்றம் என்று சொல்கிறாய் கோமகளே பண்டைய யுக வேத முனிவர் விதிப்படி நீ சொல்வது"