பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றய டு காந்தில் பாதி அ. சீனிவாசன் பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி தோற்றுவாய் பாதி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பாரதி பட்டில் தோன்றிய இணையற்ற பெரிய கவிஞன். பாட்டுக்கொருபுலவன். பகுயில், மகாகவி, தேசிய உணர்வையும், நாட்டுப் பற்றையும் ஊட்டிய பெரும்புலவன். நாட்டு விடுதலைக்கும், சமூகசீர்த்திருத்ததிற்கும். நாட்டின் அறுமைக்கும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தனது கவிதைகள் கட்டுரைகள், கதைகள், எழுத்துகள் மூலம் நாட்டு மக்களைத் தட்டி முப்பிய புரட்சிகர ஜனநாயகப் பெரும்புலவன். பாதி. நாட்டு மக்களிடையில் நிலவிய பிரிவினைப் போக்குகளையும் வேறுபாடு பாயும் பாகுபாடுகளையும் சாடினான். பாரத நாட்டின் அனைத்து மக்களின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப் பாட்டிற்காகவும் மு.ளேற்றத்திற்காகவும் பாடினான், எழுதினான். பெண் விடுதலையைப் பற்றி உணர்ச்சி வேகத்துடன் பாடினான். எழுதினான். சாதி வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் டிான். பாப்பாவைப் பாடினான், பாரத நாட்டின் முழு வடிவத்தை நமக்குக் காட்டினான். பாரதத்தின் பெருமைகளை நமக்கு நினைவூட்டினான். நாட்டின் இன்றைய சிறுமைகளை இடித்துக் வட்டினான். ஒளிமிக்க எதிர்காலத்தை வரவேற்றான். "நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் பேராதிருத்தல்" என்று தனது வாழ்க்கையின் இலட்சியத்தை வகுத்துக் கொண்டிருந்தான். அந்த வழியில் அவன் கர்ம யோகியாக வாழ்ந்தான் பாரதியின் பாடல்களை நாட்டுப் பாடல்கள், தெய்வப் பாடல்கள், ஆானப்பாடல்கள், சுயசரிதை, சமூகப்பாடல்கள். பாஞ்சாலிசபதம். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்றெல்லாம், இன்னும் தேசபக்திப் பாடல்கள், தெய்வ பக்திப் பாடல்கள், பாப்பாப் பாட்டு, புதுமைப்பெண். புதிய ஆத்திசூடி, தனிப் பாடல்கள், பலவகைப் பாடல்கள். வசனகவிதை ான்றெல்லாம் பிரித்தும் தொகுத்தும் வெளியிடப் பட்டுள்ளன. அவர் ாழுதிய பல கட்டுரைகளும், கதைகளும் கூட தனியாக வெளியாகியுள்ளன. பாதியின் கவிதைகளைப் போலவே அவர் எழுதியுள்ள உரைநடைப் பகுதியும் மிகவும் சிறப்பானவை. பாதியின் உரைநடைப் பகுதியைப் பற்றியும் ஆழ்ந்த ஆய்வுகள் செய்வது அவசியமாகும். அவர் தனது உரைநடைப் பகுதியில் அரசியல், சமூகம், மொழி, இசை, சுதேசிக் கல்வி முதலிய பல்வேறு துறைகளைப் பற்றியும் கருத்து நிறைந்த பல சிறந்த o கட்டுரைகள் எழுதியுள்ளார். பாரதி நமது நாட்டு மக்கள் வழிபடும் பல்வேறு தெய்வங்களை பற்றியும் வேறு தெய்வங்களைப் பற்றியும். தெய்வீகப் பாத்திரப் படைப்புகளைப் பற்றியும். பாரத தேசத்தைப் பற்றியும். அதன் பாரம்பரியமான பண்பாட்டுச் சிறப்புகளைப் பற்றியும். தமிழ்நாட்டைப் பற்றியும் அதன் பெருமைகளைப் பற்றியும் தேசீய விடுதலைஇயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களைப் பற்றியும் வரலாற்றுச்சிற்பிகளைப் பற்றியும், கவிஞர்களைப் பற்றியும் இலக்கியச் செம்மல்கள் பற்றியும் பல்வேறு துறை வல்லுனர்களைப் பற்றியும், பிறநாட்டு விடுதலை, இயக்கங்களைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், சமுதாய சீர்திருத்தம் பற்றியும்.பெண் விடுதலை பற்றியும், எதிர்காலச் செல்வங்களின் முன்னேற்றம் பற்றியும் தீர்க்கமான தெளிவான கருத்துகளைக் கொண்ட பல பாடல்களையும் பாடியிருக்கிறார். தனிச்சிறப்பான பாடல்களாக கண்ணன் பாட்டு, குயில் பாட்டு. வசன கவிதை, இயற்கையைப் பற்றிய பல பாடல்களும் அமைந்துள்ளன. தமிழில் தற்காலத்தில் ஒரு காவியம் எழுத வேண்டும் என்று கருதி "பஞ்சாலி சபதம்" என்னும் தலைப்பில் ஒரு சிறப்புமிக்க ஒரு சிறு காவியத்தைப் பாடியுள்ளான். மகாபாரதப் பெருங்கதையின் ஒரு முக்கியமான நிகழ்ச்சியைத் தனது காவியத்திற்குக் கருவாக எடுத்துக் கொண்டாலும் பாரதி பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்தில் சிறந்த பல புதிய கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். பாரதி பாடல்களைப் படிக்கும்போதும், பாடும் போதும், பாடுவதைக் கேட்கும் போதும். பாரதியின் தேச பக்தியையும், மொழிப் பற்றையும். தமிழ்ப் பற்றையும், தெய்வ பக்தியையும், மனிதாபிமானத்தையும், அவனுடைய தத்துவ தரிசனத்தையும் தலை சிறந்த கவித்துவத்தையும், கருத்தாழத்தையும் காண முடிகிறது. பாரதியின் பன்முகப் பரிமாணங்களையும் உலகப் பெருவடிவத்தையும் அதில் காண முடிகிறது. பாரதி எதைப் பற்றிப் பாடினாலும், எந்தத்துறையைத் தொட்டுத் தனது கவிதைகளை வடித்தாலும் பாரத நாட்டுப் பண்பட்டு தளத்தில் நின்றும் தமிழ்நாட்டின் தனித்தன்மையில் நின்றும் பாடியுள்ளான். பாரத மண்ணில் ஆழவேர் விட்டு ஆல விருட்சமாய்ப் படர்ந்து நமக்கு நிழல் தருகிறான் பாரதி. பாரதப் பண்பாட்டிலும், பாாதத்தின் மரபு வழியிலும் உறுதியாகவேர் ஊன்றி நிற்கும் அதே தருணத்தில் அவன் பழைய சிதைந்துபோன காலத்திற்கு ஒவ்வாத பழமைவாதக் கருத்துகளை உதறி எறிந்து விட்டு, காலத்திற்கேற்ற புதுமைக் கருத்துகளை உருவாக்கி,