பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் எண்ணமதில் விலங்கெனவே கணவர் எண்ணி ஏதெனிலும் செய்திடலாம் என்றான் பாட்டன், வண்ண முயர் தேவநெறி மாறிப் பின்னாள், வழங்குவதிந் நெறி யென்றான் வழுவே சொன்னான் எந்தையர் தம் மனைவியரை விற்றதுண்டோ?" என்னும் கேள்வியை எழுப்புகிறான். "இது காரும் அரசியரைச் சூதில் தோற்ற விந்தையை நீர் கேட்டதுண்டோ?" என்னும் கேள்வியை மேலும் கேட்டுத் தன் கருத்தைத் தொடர்ந்து கூறுகிறான். "..... விலை மாதர்க்கு விதித்ததையே பிற்கால நீதிக்காரர் சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார் சொல்லளவு ஏதானாலும் வழக்கந்தன்னில் இந்த விதம் செய்வதில்லை, சூதர் வீட்டில் ஏவற் பெண் பணயமில்லையென்றும் கேட்டோம்" என்று கூறி மேலும் தொடர்ந்து, "தன்னையிவனிழந்தபடிமையான பின்னர்த் தாரமேது, விடேது. தாதனான பின்னையுமோருடைமையுண்டோ என்றுருமைப் பெண்ணரசி கேட்கின்றாள், பெண்மை வாயால்," என்று பாஞ்சாலி கிளப்பிய வாதத்தை மீண்டும் அதற்கான பதிலையும் உள்ளடக்கிய கேள்வியாக விகர்ணன் சபையில் கூடியிருந்த மன்னர்களை நோக்கிச் சுட்டிக்காட்டி மேலும் தொடர்கிறான். "மன்னர்களே களிப்பது தான் குது என்றாலும் மனுநீதி துறந்திங்கே வலி பாவந் தன்னையிருவிழி பார்க்க வாய் பேசிரோ? தாத்தனே நீதியிது தகுமோ என்றான்' என்று மன்னர்களிடமும் தனது தாத்தனான நீதி அறிந்த பிதாமகர் வீட்டு மனிடமும் சுடச்சுடக் கேள்விகளை அடுக்கிக் கேட்டான். விகர்ணன் இந்த நியாயவாதங்களை எடுத்துக் கூறியவுடன் சபையில் ஒரு 59 சலசலப்பு ஏற்பட்டது. "எழுந்திட்டார் சில வேந்தர் இரைச்சல் இட்டார் ஒவ்வாது சகுனி செய்யும் கொடுமை யென்பார் ஒரு நாளும் உலகிதனை மறக்காதென்பார் எவ்வாறு புகைந்தாலும் புதைந்து போவீர். ஏந்திழையை அவைக் களத்தே இகழ்தல் வேண்டா செவ்வானம் படர்ந்தாற் போல் இரத்தம் பாயச் செருக்களத்தே தீருமடா பழியிஃதென்பார்" என்று மகா பாரத போருக்கான முன் எச்சரிக்கை எழுந்தது. எனினும் கொடுமை தொடர்ந்தது. அண்ணன் ஆணைப்படி, "துச்சாதனன் எழுந்தே- அன்னை துகிலினை மன்றிடையுரிய லுற்றான்" அக்கிரமத்தின் சிகரமாக, அவலத்தின் உச்சமாக துகிலுறுதில் கொடுமை சபை நடுவில் தொடங்கியது. "அச்சோ தேவர்களே- என்று அலரி அவ்விதுரனும் தரை சாய்ந்தான்" இந்த அவலக் காட்சியை கொடுமையின் கொடு முடியைக் காண சகிக்க முடியாமல் மகாத்மா விதுரன் மயங்கி விழுந்தான் என்பதைப் பாரதி குறிப்பிடுகிறார். "பிச்சேறியவனைப் போல-இந்தப் பேயனும் துகிலினை யுரிகையிலே உட்ஜோதியில் கலந்தாள்- அன்னை உலகத்தை மறந்தாள் - ஒருமையுள்ளாள்" பாஞ்சாலி ஹரி, ஹரி என்றாள். கண்ணா, கண்ணா, கண்ணா என்று அபயக்குரல் கொடுத்தாள். அவள் இரு கைகளையும் உயரத் தூக்கினாள். தன்னை மறந்தாள், உலகை மறந்தாள், தெய்வத்துடன் ஒருமையுற்றர் என்று பாரதி கூறும் இந்தக் காட்சி கண்ணனை அவன் பெருமையை, அவன் அருளை, அவனது மகிமையை, கண்ணனது முழுமையான காட்சியை அவனது அருஞ்செயலை, தனது கவிதைகளில் முன் வைக்கிறார். கண்ணன்னது பெருமையைக் குறிக்கும் இந்தப் பாடல்கள் பாரதி பாடல்களிலும் குறிப்பாகப் பாஞ்சாலி சபதத்திலும், ஒரு தனித்தன்மையான பக்தி இலக்கியப் பாடல்களாகும். கண்ணன் பாட்டுக்கு அடுத்தாற் போல கண்ணன் பெருமைகளைக் கூறும் பாடல்களைப் பற்றி ஏற்கனவே திருதராஷ்டிரன் கூறியதைக் குறிப்பிட்டுள்ளோம். இங்கு பாஞ்சாலிக்கு அருள்