பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் விருந்து காண் கடவுளுக்கோர் வெற்றி கானே" என்னும் பாடல் மூலம் பாரத நாட்டின் ஆணி முத்துப் போன்ற ஆதார ருதியை சுட்டிக்காட்டி அந்த மாபெரும் மகத்தான பண்பாட்டு எத்திலிருந்து பாரத மாதா மாலையைப் பாரதி தொடங்குகிறார். "வெற்றி கூறுமின், வெண் சங்கு ஊதுமின் கற்றவராலே உலகு காப்புற்றது உற்றது இங்கு இந்நாள் உலகினுக்கெல்லாம் இற்றை நாள் வரையிலும் அறமிலா மறவர் குற்றமே தமது மகுடமாகக் கொண்டோர் மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார், பற்றையரசர் பழி படுபடையுடன் சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார்" என்று மனிதகுல வரலாற்றில் இழையோடியிருந்த ஆட்சிக்கொடுமையை வரலாற்றியலுக்கு ஆதாரமான ஒரு புதிய பார்வையை பாரதி தொகுத்துக் காட்டியுள்ளார்.இதில் கவியின் ஆழ்ந்த உள்ளத்தையும் உண்மை ஒளியையும் தெளிந்த கருத்து வடிவத்தையும் காண்கிறோம். "இற்றை நாள் பாரில் உள்ள பல நாட்டினர்க்கும் பாரத நாடு புது நெறி பழக்க ஒற்ற திங்கிந் நாள் உலகெலாம் புகழ் இன்ப வளஞ் செறி பண்பல பயிற்றும் கவீந்திரனாகிய ரவீந்திர நாதன் சொற்றது கேளிர்" என்று கவி ரவீந்திரநாதர் கூறியதை மேற்கோள்காட்டி மோகனதாஸ் கரம் சந்திர காந்தியை அடையாளம் காட்டுகிறார். "புவி மிசையின்று. மனிதர்க் கெல்லாம் தலைப் படு மனிதன் தர்மமே உருவாம் மோகன தாஸ் கர்ம சந்திர காந்தி யென்று ரைத்தான் அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே தலைவனாகக் கொண்டு புவி மிசைத் தருமமே HH அரசியல் அதனிலும் பிற இயல் அனைத்திலும் வெற்றி தரும் எனவே தம் சொன்னதை முற்றும் பேண முற் பட்டு நின்றார் பாரத மக்கள் இதனால் படை ஞர் தம் செருக் கொழிந்து உலகில் அறம் திறம் பாத கற்றோர் தலைபட்சக் காண்போம் விரைவினிலே வெற்றி கூறு மின் வெண் சங்கு ஊதுமின்" என்று காந்தியின் தலைமையில் புது நெறியை நிலைநாட்ட பாரத மக்கள் முன்வந்துள்ளதாக காந்தியை பாரதி பாராட்டுகிறார். இங்கு அரசியல் நெறியிலும் சரி. இதர இயல் அனைத்திற்கும் அறவழியே சிறந்தது என்று நமது சாத்திரங்கள் கூறுவதை பாரதி இங்கு தெளிவாக வலியுறுத்திக் கூறுகிறார். காந்தி நெறியை தீது சிறிதும் பயிலாச் செம்மணிமா நெறி என்றும் அந்த ஒத்துழையாமை என்னும் அகிம்சா நெறியால் விடுதலை நிச்சயம் என்றும் கூறிக் களிப்படைகிறார். "தீது சிறிதும் பயிலாச் செம்மணிமா நெறி கண்டோம் வேதனைகள் இனி வேண்டா, விடுதலையோ திண்னமே" என்று பாடுகிறார். "விடுதலை பெறுவீர் விரைவா நீர் வெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும், கெடுதலின்றி நம் தாய்த் திரு நாட்டின் கிளர்ச்சி தன்னை வளர்ச்சி செய்கின்றான் சுடுதலும் குளிரும் உயிருக்கில்லை சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கில்லை எடுமினோ அறப் போரினை யென்றான் எங்கோமேதக மேந்திய காந்தி என்றும் "பாரதப் பொன்னா டெங்கும் மாந்த ரெல்லாம் சோர்வை அச்சத்தை மறந்து விட்டார் காந்தி சொற் கேட்டார். காண்பார் விடுதலை கனத்தினுள்ளே” என்று கூறி காந்தி வழியில் இந்திய விடுதலை உறுதி என்று காலத்தைக்