பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி | சீனிவாசன் வேத முனி போன்றோர் விருத்தராம் எந்தையிரு பாத மலர் கண்டு பரவப் பெறுவேனா? ஆசைக் குமரன் அர்ஜுனனைப் போல் வான்றன் மாசற்ற சோதி வதன மினிக் காண்பேனோ' என்றெல்லாம் லஜபதியின் பிரலாபமாக பாரதி கூறுகிறார். "விடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை நாடு பிறிந்த நலிவினுக்கென் செய்கேனே?" என்று தொடங்கி பாஞ்சாலத்திருநாட்டின் ஒப்பிலாத பெருமையை பாரதி விவரித்துக் கூறுகிறார். "ஆதி மறை தோன்றிய நல்லாரிய நாடு எந்நாளும் நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு சிந்து வெனும் செய்தவத் திரு நதியும் மற்ற திற் சேர், ஐந்து மணி யாறும் அளிக்கும் புனல் நாடு, ஐம்புலனை வென்ற எண்ணில் வீரருக்கும் தாய் நாடு நல்லறத்தை நாட்டுவதற்கு நம் பெருமான் கெளரவராம் புல்லரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு, கன்னானுந் திண்டோள் களவீரன் பார்த்தன் வுரு வின்னானொலி கேட்ட மேன்மைத் திருநாடு கன்னனிருந்த கருணை நிலம் தர்மமெனும் மன்னன் அறங்கள் வளர்ந்த புகழ் நாடு" "ஆரியர் தம் தர்ம நிலை ஆதரிப்பான் வீட்டுமனார் நாரியர் தம் காதல் துறந்திருந்த நன்னாடு வீமன் வளர்த்த விறநாடு, வில் லசுவத் தாமணிருந்து சமர் புரிந்த வீரநிலம் சீக்கர் எனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ் தருநல் ஆக்க முயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த சீரியர் மெய்ஞ்ஞான தயா நந்தர் திருநாடு என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ? பன்னரிய துன்பம் படர்ந்திங்குமாய்வேனோ?" 73 என்றும், "எத்தனை ஜன்மங்கள் இருட் சிறையில் இட்டாலும் தத்து புனல் பாஞ்சாலம் தனில் வைத்தால் வாடுகிலேன்." என்றும் லாலா லஜபதிராயின் பிரலாபத்தை இனிய இலக்கியத் தமிழில் பாரதி பாடியுள்ளது நமது உள்ளத்தை உலுக்கி விடுகிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரத நாட்டின் தென்கோடிப் பகுதியில் விடுதலைப் போராட்டத்தின் பேரலை வீசியது. துத்துக்குடியில் ஆங்கிலேயர் ஆலையில் தொழிலாளர் வேலை நிறுத்தம், அன்னியத்துணி நிராகரிப்பு. சுதேசி இயக்கத்தின் இடியும் குமுறலும், தென் பாண்டிய மண்ணைக் குலுக்கியது. அன்னிய ஆட்சியின் தடையுத்தரவுகள், அடக்குமுறைக் கொடுமைகள், அந்தக் கொடுமைகளுக்கெதிராக தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் பொது மக்களுடைய ஆர்ப்பாட்டங்களும், அர்த்தால்களும் கடையடைப்புகளும் நடைபெற்றன. அன்னிய ஆட்சியாளர்களின் தடைஉத்தரவுகளும், ஊரடங்கு உத்தரவுகளும் தடியடிகளும் துப்பாக்கிப்பிரயோகங்களும் மக்களை வதைத்தன. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கொடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய வ.உ.சிதம்பரம் பிள்ளை. சுப்ரமணிய சிவா ஆகியோர் அன்னிய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு, ஜன்ம தண்டனைகொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். கடுங்காவல் தண்டனையாக வ.உ.சி.யை செக்கிழுக்க வைத்தனர். இக்கொடுமைகளுக்கெல்லாம் காரணமான வெள்ளைக்காரக் கலெக்டர் ஆஷ்துரையை மணியாச்சி ஜங்ஷனில் வாஞ்சிநாதன் என்னும் இளம் தேச பக்தன் சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டான்.இத்தகைய தீவிரப் போராட்டங்கள், போராட்ட நிகழ்ச்சிகள் நாட்டைக் குலுக்கிக் கொண்டிருந்தன. ஆங்கிலேய கலெக்டர் விஞ்சு துரைக்கும் தேச பக்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கும் வாக்குவாதம் நடந்ததாகக் கற்பித்து பாரதி, அன்றைய அடக்குமுறைக் கொடுமைகளையும் அதை எதிர்த்து தேச பக்தர்களின் பதிலுமாக ஒரு அருமையான பாடல் வரிகளைப் பாடியுள்ளார். அப்பாடல்கள் அக்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மிக்க துணிவுடன் பாடிய பாடல்களாகும். இந்த இரு பாடல்களும் இங்கு முழுமையாக நினைவு கூரத்தக்கதாகும்.