பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்று பாரதி வேண்டுவது வையத் தலைமை வேண்டும் என்பதாகும். தனக்கு மட்டுமல்ல, பாரதத்திற்கே வையத் தலைமை வேண்டும் என்று பாரதி வேண்டுகிறார். உலகின் தலைமை பாரதத்திற்கு வர வேண்டுமானால் அதுதானாக வராது. அதற்கான பக்குவநிலைக்கு தகுதி நிலைக்கு பாரதத்தை உயர்த்த வேண்டும். அதற்கான கடும் முயற்சியில் உழைப்பும் வேண்டும் என்பதையே பாரதி பேசுகிறார். புதிய ஆத்தி சூடியில் பாரதி இந்த நாட்டின் இளைஞர்களுக்கு 'வைய தலைமை கொள்' என்றே பாடம் சொல்லிக் கொடுக்கிறார். உலகத்தின் தலைமைக்கு பாரதம் உயர வேண்டும். உலகிற்கு பாரதம் புது நெறி காட்ட வேண்டும் என்று பாரதி வலியுறுத்துகிறார். தன்னிலையிலிருந்து நாட்டை உயர்த்தும் நிலை வரை பாரதி அன்னை காளியிடம் அடி பணிந்து வேண்டுகிறார். பாரதி உலகத் தலைமை பற்றி குறிப்பிடும்போது தன்னை பார்த்தனுக்கும் கண்ணனுக்கும் இணையாக உயர்த்த வேண்டும் என்று கூறுவது நமது பண்பாட்டு மரபின் வழியாகும். கண்ணனையும், பார்த்தனையும் பாரதி பல இடங்களிலும் உயர்த்தி உதாரணம் காட்டிப்பாடுவதைக் காண்கிறோம். பாரதியின் பாரத சமுதாயம் அரசியலில் புது நெறி அமைய வேண்டும். பொருளாதாரத் துறையில் உழைப்பு உற்பத்திப் பெருக்கம், செல்வச் செழிப்பு. இல்லாமை நீங்கிய நிலை, அனைவரும் சமநிலை சம வாய்ப்பு நிலை ஆகியவை அமைய வேண்டும். சமுதாயத்துறையில் அனைவரும் சமம், அடித்தட்டில் உள்ளோரைக் கைதுக்கி மேலே உயர்த்துதல் ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டும். கல்வி ஞானம், அறிவு வளர்ச்சி, கலைப் பெருக்கம், கவிப்பெருக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அனைவருக்கும் முழு வாய்ப்புகள் ஏற்பட வேண்டும். தகுதியும் திறமையும் அதற்கான அங்கீகாரம் கூடத் தானாக வராது. அதற்கான முயற்சிகளை அனைத்து தரப்பிலும் நடைபெற வேண்டும். அனைவரும் தனி நிலையிலும், கூட்டு முறையிலும் இடைவிடாது தொழில்களும் தொழில் முயற்சிகளும் செய்தல் வேண்டும். பாரத சமுதாயம் அரசியல் நெறியிலும், செல்வச் செழிப்பிலும், கல்வி அறிவிலும், ஞானத்திலும், உயர்ந்தும், உலகத்திற்கு புது நெறி வையத்தின் தலைமையாக உயர்வு கொள்ள வேண்டும். தலைமை என்பது யாராவது நியமனம் செய்வது மூலமாகவோ அல்லது ஒதுக்கீடு செய்வதன் மூலமாகவோ அல்ல. அல்லது வெறும் சட்டவிதிகள் மூலமாகத் தேர்வு செய்யப்படுவதோ அல்ல. அது வெறும் சம்பிரதாய பூர்வமானதேயாகும். அதற்கு மாறாக முயற்சியால், தகுதியால், திறமையால் அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக் Յ:3 கொள்வதன் மூலம் அமைவதாகும். வெறும் தோற்றத்திலும் வேடத்திலும், பந்தாவிலும் ஏற்படும் தலைமை அல்ல. இந்தப் புது நெறி படிப்படியாக முழுமை பெற வேண்டும். அதற்கான முன்னேற்றப் பாதையில் சிரமங்கள் ஏற்பட்டால் அவைகளையும் சமாளித்துக் கொண்டு முன் செல்ல வேண்டும். நெறி தவறியோரை பாரத அன்னை விழுங்கிக் கூத்தாடி விடுவாள். பாரத மக்கள் அந்த விரும்பப்படாத சக்திகளை ஒதுக்கி நிராகரித்து விடுவார்கள். பாரத அன்னை அப்பாதகர்களை ஏறி மிதித்திடுவாள். காறி உமிழ்ந்திடுவாள். பொய் ஏடுகள் பொசுக்கப்பட வேண்டும். அவ்வப்போது தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும். அப்போது அதற்குக் கட்டுண்டு, பொறுத்திருந்து காலம் வரும்போது (காண்டீபம்) நமது வீரம் அதற்கு பதில் சொல்ல வேண்டும். நமக்குக் கண்ணனும், பார்த்தனும் துணைநிற்பார்கள். கண்ணன்நமது வழிகாட்டி பார்த்தன்நமது செயல் வீரன். அவர்கள் பாரதத்தின் ஆன்மாக்கள். நமது முயற்சிகள் எல்லாம் எங்கோ உள்ள மோட்சத்திற்குச் செல்வதற்காக அல்ல. இந்தப் பாரதபுண்ணிய பூமியில் இந்த உலகில் மனிதகுலம் முழுமைக்கும் முழுமையான விடுதலை காண்பதற்கான முயற்சிகளாகும். அதுவே முக்தி. அதுவே மோட்சம், அதுவே அறம் பொருள் இன்பத்தின் வழியில் அடையும் வீடுபேறு. தனி மனிதனுடைய பசியைப் பிச்சை போட்டுப் போக்கி விடலாம். ஆனால் சமுதாயத்தின் பசியை பிச்சை போட்டு அடக்கிவிட முடியாது. ஆற்றிவிட முடியாது. அப்பசியைப் போக்கி விட முடியாது. உலகிலேயே அதிகமான அளவில் அனைத்து வளங்களும் செல்வவளமும் அறிவு வளமும் நிறைந்த பூமி பாரத புண்ணிய பூமி. கம்பன் தனது இராமாயணம், பால காண்டம் நாட்டுப் படலத்தில் நாட்டின் செல்வ வளத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, "கலம் சுரக்கும் நிதியம் கணக்கிலா நிலம் சுரக்கும் நிறை வளம் நல்மணி பிலம் சுரக்கும் பெறுவதற்கு அரிய தம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்" என்று கூறுகிறார். ஆனால் காலக் கொடுமையால் இன்று பாரதம் வறுமை மிகுந்த நாடாக நீடிக்கிறது.ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாடு அன்னிய ஆட்சிக்கொடுமைகளால் வறுமைப்பட்டிருக்கிறது. வறுமை என்றால் வெறும் பொருள் வறுமை, வாழ்க்கை வறுமை மட்டுமல்ல. உழைப்பில் வறுமை, உழைப்பு சக்தியில் வறுமை, உற்பத்தியின் வறுமை, உற்பத்தித்திறனில் வறுமை, கல்வியில் வறுமை, அறிவில் வறுமை, அனுபவத்தில் வறுமை, ஞானத்தில் வறுமை முதலிய பல