பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் ஆதலால் மனிதன் தொழில் செய்து தான் தீர வேண்டும். ஆனால் நீ தொழில் செய்யுமிடத்தே அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யும் உலகத்தாரைப் போல தொழில் செய்யாதே என்றும், தொழிலுக்கு தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும் என்று பாரதி தனது பகவத்கீதை மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிடுகிறார். மேலும் இங்கு தொழில் செய்யும்படிதூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து என்ன மாதிரியாகச் செய்ய வேண்டும் என்று பகவான் காட்டியிருப்பதே மிகமிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது என்றும், "பற்று நீக்கித் தொழில் செய், பற்றுநீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, இதுதான் முக்கியமான பாடம். தொழில்கள் தான் நீ செய்து தீர வேண்டியதாயிற்றே" நீவிரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே. எனவே அதை மீட்டும் மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் பந்தங்களில் அதன் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே, அவற்றால் இடர்ப்படாதே, அவற்றால் பந்தப்படாதே தளைப் படாதே இது தான் முக்கிய உபதேசம்" என்று பாரதி குறிப்பிடுகிறார். 'எந்த விதமான மனச் சோர்வுக்கும். கவலைக்கும், கலக்கத்துக்கும், பயத்துக்கும், ஐயத்திற்கும், இடம் கொடாதிரு" என்று பாரதி குறிப்பிடுகிறார். அத்துடன் ஒருவர் தனக்குரிய, தான் எடுத்துக் கொண்டுள்ள எந்தத் தொழிலாயினும் அதில் ஈடுபாடு கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு கொள்ள வேண்டும். அத்தொழிலைப் பற்றிய முழுமையான ஞானத்தையும், அதை நிறைவேற்றக் கூடிய தகுதியையும் திறமையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். அதனால்தான் "பண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்குமாங்கே, எண்ணிய எண்ணமெல்லாம் எளிதிலே வெற்றி பெய்தும்' என்றும் கூறுகிறார். இந்த உலகமே பொய் என்று கூறுவது அவச் சொல்லாகும். வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு இந்த சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இந்த உலகத்திற்கு வேண்டியவை நீண்ட வயது, நோயில்லாமை, அறிவு செல்வம் என்ற நான்குமாகும். இவற்றைப் பெறுவதற்கு நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். அவைகளில் தெய்வ ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடு தானாகவே கிடைக்கும் என்று பாரதி குறிப்பிடுகிறார். பாரதி தனது தேசீயப் பாடல்களில் தேசபக்தி, தேச விடுதலை, தேச முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, அனைவருக்கும் கல்வி ஆகிய அனைத்தையும் ՀՅ பற்றி வற்புறுத்திப் பேசுகிறார். இல்லாமையும் கல்லாமையும் நீங்கப்பாடுபடுவது விடுதலைக்கும் வழி வகுக்கும். விடுதலை பெறுவதன் மூலம் இல்லாமையையும், கல்லாமையையும் நீக்க வேண்டும் என்று இரண்டையும் இணைத்து பாரதி பேசுவதைக் காணலாம். பட்டினில் ஆடை, பஞ்சினில் உடை, ஆயுதம் செய்தல், காகிதம் செய்தல், ஆலைகள் வைத்தல், கல்விச் சாலைகள் வைத்தல், குடைகள் செய்தல் உழுபடைகள் செய்தல், கோணிகள் செய்தல், இரும்பாணிகள் செய்தல், வண்டிகள் செய்தல், பெரிய பெரிய கப்பல்கள் செய்தல் முதலிய பலவகைத தொழில்களையும் செய்வோம் என்றும் மற்றும் கல்வி, விஞ்ஞான வளர்ச்சி முதலிய அறிவுத்துறைகளை வளர்ப்பது மேம்படுத்துவது பற்றியும் குறிப்பிட்டுக் கடைசியில் உலகத் தொழில் அனைத்தையும் உவந்து செய்வோம் என்று கூறி முடிக்கிறார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதும் திறமை கொண் தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே என்பதும் பாரதியின் அடிப்படைத் தத்துவமாகும். தொழில் என்னும் தலைப்பிலேயே "இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே. எந்திரங்கள், வகுத்திடுவிரே" என்று தொடங்கி கரும்பைச் சாறு பிழியவும் கடலில் மூழ்கி முத்தெடுக்கவும் மற்றும் புவிமேல் ஆயிரமாயிரம் தொழில்கள் செய்யவும் கூறுகிறார். மண்ணை எடுத்துக் குடங்கள் செய்யவும், மரத்தை வெட்டி மனைகள் செய்யவும், உண்ணக் காய்கனி உண்டாக்கவும், உழுது நஞ்சை பயிர் செய்யவும், எண்ணெயும் பாலும் பெருக்கிடவும், இழைகள் நூற்று நல்லாடைகள் செய்யவும் மேலும் பல்லாயிரம் தொழில்கள் செய்யவும் பாரதி ஆணையிட்டுக் கூறுகிறார். பாரதி எப்போதும் தொழில் செய்வது. கல்வி கற்பது, அறிவை வளர்ப்பது பற்றி மட்டும் கூறுவதில்லை. அத்துடன் பாட்டு, செய்யுள், பாரத நாட்டியம், கூத்து. மகிழ்ச்சி தரும் ஆடல் பாடல்கள் மற்றும் உலகத்தின் பொருள்கள் அனைத்தையும் பற்றியும், புதிய சாத்திரங்கள் நூல்கள் ஆகியவைகளைப் படைக்கவும் நாட்டில் நல்லறத்தை நிலைநாட்டி இன்பங்கள் ஊட்டவும் கூறி, "தேட்ட மின்றி விழி எதிர் காணும். தெய்வமாக விளங்குவிர் நீரே" என்று பாடி முடிக்கிறார். அரசியல் நெறி பற்றி பாரத நாட்டின் மரபு வழியில் நின்று பாரதி பல புது நெறிக் கருத்துகளை முன்வைக்கிறார். ஆட்சிமுறையில் செங்கோன்மை என்றும் நமது முன்னோர்கள் பல சாத்திரங்கள் மூலமாக இலக்கணம் வகுத்துக்