பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் கல்லாமையிலிருந்தும் விடுதலை பெறுவது என்பது அனைத்து விடுதலைக்கு பரிபூரண சுதந்திரத்திற்கு ஆதாரமாகும். வித்தை வளர வேண்டும், கல்வி பெருக வேண்டும், வீடு தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொருபள்ளி, நாடு முற்றிலும் உள்ள ஊர்கள், நகரங்கள் எங்கம் பல பல பள்ளி, தேடு கல்வி இல்லாத தொரு ஊரைத் தீக்கீரையாக்குவோம். கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை என்றெல்லாம் பாரதி பாடுகிறார். இத்தகைய கருத்துக் கவிதைகளுக்கு ஈடு இணையே இல்லை. உலகில் இத்தகைய உயரிய கவிஞன் இதுவரை பிறந்ததில்லை. இன்னும் பாரதி கல்வியையும் உழைப்பையும் இணைத்துப் பேசுகிறார். ஓங்கி கல்வி உழைப்பை மறக்காதீர் என்று பாடுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கல்வி கற்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்துகிறார். கல்வி கற்று அறிவுத் தெளிவு ஏற்பட்டு விட்டால் இதர பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வல்லமை, மனோதிடம் நமக்கு ஏற்பட்டு விடும். சோலைகள் செய்தல், சுனைகள் இயற்றல், அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயங்கள் பதினாயிரம் கட்டுதல், இதுபோல் இன்னும் எத்தனையோ தர்ம காரியங்கள் செய்தாலும் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல் என்று பாரதி கூறுகிறார். பாரதியின் இந்தக் கவிதை வரிகளுக்கு ஈடு இணையே இல்லை. கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும் என்று பாரதி நமது கவனத்தை ஈர்க்கிறார். ஐந்தாவதாக பெண் விடுதலை பற்றி இத்தனை சுத்தமாகப் பேசியவன் பாரதியைப் போல் யாருமில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். பாரதியின் இந்தப் பெண் விடுதலைக் கருத்துக்கள் பாரதப் பண்பாட்டு தளத்தின் நேர் ஆக்க நிலையிலிருந்து எழுந்தவையாகும். பாரதிக்கு தமிழ் மொழி தவிர வேறு பல இந்திய மொழிகளும் ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய ஐரோப்பிய மொழிகளும் தெரியும் என்பதை நாம் அறிவோம். அவர் ஆங்கில மொழியை நன்கு அறிந்திருந்த போதிலும், ஆங்கிலக் கல்வி கற்றிருந்த போதிலும் அவருடைய சிந்தனைகள் முழுவதும் இந்திய சிந்தனைகளாகும். பாரதிய சிந்தை னகளாகும். பாரதப் பண்பாட்டு சிந்தனையிலிருந்தே தான் பாரதி பெண் விடுதலையைப் பற்றி மிகத் தெளிவாகப் பேசுகிறார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம், வைய வாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று பாரதி பாடுகிறார். இன்னும் Hs) அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர், நம் தேசத்து வீரா, காரிகைக் கணத்தீர் துணிவுற்றே என்றும், கற்பு நிலை என்றால் இருவருக்கு,ா பொதுவென்று வைப்போம் என்றும். நானும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்றும், நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் என்றும் உலக வாழ்க்கையிா நுட்பங்கள் தேரவும், மூத்த பொய்மைகள் யாவும் அழிக்கவும், மூடக் கட்டுகள் யாவும் தகர்க்கவும். பாரதி பெண்ணுரிமையைப் பாடுகிறார். பெண் உரிமைக்கும் பெண் விடுதலைக்கும் புதுமைப் பெண்ணுக்குமான புதுமைக கருத்துக்களைக் கூறி அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையைப் பாராட்டி, பெண்மை வீரத்தின் சின்னமாக பாஞ்சாலி சபதத்தைக் காவியமாகப் பாடிச் சிறப்புப் பெற்றுள்ளார் பாரதி என்னும் மகாகவி, அரசியல் விடுதலை, சுயாட்சி, சமத்துவமும் சமவாய்ப்புகளும் நிறைந்த பொருளாதார விடுதலை சமூக விடுதலை சமூக நீதி-சமுதாய சீர்திருத்தம், அறியாமை, கல்லாமையிலிருந்து விடுதலை-அனைவருக்கும் கல்வி, பெண் விடுதலை ஆகியவை உள்ளிட்ட முழுமையான விடுதலை பெற்ற பரிபூரண சுதந்திரத்தைப் பெற்ற பாரத அன்னையின் முழுமையான முழு வடிவத்தைப் பெருவடிவத்தை பாரதி தனது தொலைநோக்கில் கண்டான். இதுவே பாரதியின் விடுதலை நோக்கின் பன்முகப் பரிமாணங்களாகும். ஐரோப்பிய ஏகாதிபத்ய வல்லரசுகளின் காலனி ஆதிக்கத்திலிருந்தும். அரசியல் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற்ற இந்தியாவும், இதர பல ஆசிய ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சம உரிமை, பெண்ணுரிமை, பெண் விடுதலை, தலித் மற்றும் கருப்பு இன மக்களின் விடுதலை, அறியாமையிலிருந்தும் கல்லாமையிலிருந்தும் வறுமை, பசி, பட்டினியிலிருந்தும் விடுதலை, மனித உரிமை, மொழி உரிமை தேசீய இன உரிமை, மனித இனத்தின் வாழும் உரிமை ஆகிய முழுமையான ஜனநாயக உரிமைகள் நிறைந்த உலக வடிவம் தோன்றத் தொடங்கியிருக்கிறது. பாரதியின் சிந்தனைகள் இதற்கு விடிவெள்ளியாக விடுதலைக் கருத்துகளின் முன்னோடியாக அமைந்திருப்பதை அவருடைய கவிதைகளின் ஆழ்ந்த கருத்துகளில் காண்கிறோம். பாரதியின் கவிதையில் தமிழ்நாட்டின் தனித்தன்மை பாரதி தமிழ்க் கவிஞன். தமிழ்ப் புலவன். அவன் தனது தாய் மொழியான தமிழ் மொழியில் தனது கவிதைகளைப் பாடினான். தமிழ் மொழியின் தமிழினத்தின் தமிழ்நாட்டின் தனித் தன்மைகளைப் போற்றி நமது மரபு வழியில் நின்று தமிழனுக்கு தமிழ் மக்களுக்குச் சில தனி ஆணைகளை விடுத்துள்ளான்.