பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் - 'தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று ஆணையிடுகிறார். கம்பனும் வள்ளுவனும், இளங்கோவும் இதர பல புலவர்களும் பிறந்த இந்தத் தமிழ் மண்ணில் நாம் ஊமையராய், செவிடர்களாய், குடர்களாய் வாழ்கின்றோமே இது சரியா? சேமமுற வேண்டுமெனில் "தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்" என்று பாரதி பேசுகிறார். இவர் இன்னும் பேசுகிறார், "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்" "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை திறமையான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" "உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்' பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார், தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்க மரார் சிறப்புக் கண்டார்" என்னும் இனிய தமிழ்ப் பாடலைப் படைத்துக் காட்டி நமக்கு அறிவுரை கூறியுள்ளார். இன்று உலகின் பல நகரங்களிலும் தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தமிழர் இலக்கிய அமைப்புகள் பண்பாட்டு அமைப்புகள், நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்திய நாட்டின் பல பழைய, புதிய நகரங்களில் மட்டுமல்லாமல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாக் ፵፰ கண்டங்களில் உள்ள பல நாடுகளிலும் நகரங்களிலும் உள்ள தமிழக சங்கங்கள், மன்றங்கள் மற்றும் தமிழர் இலக்கிய அமைப்புகளின் செய திறனை விரிவுபடுத்த வேண்டும். நிதி நிறைந்தோரும் தமிழ் அறிா, ஆர்வலர் பலரும் அந்த அரும்பணிகளுக்கு உதவிட வேண்டும். "வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல் தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து ஞானம் பொய்க்க நசிக்கு மோர் சாதி சாத்திரம் கண்டாய் சாதியின் உயிர்த்தலம் சாத்திரம் இன்றேல் சாதியில்லை பொய்மைச் சாத்திரம். புகுந்திடின் மக்கள் பொய்மையாகி புழுவென மடிவர்" என்று ஒரு கடுமையான எச்சரிக்கையை பாரதி விடுத்துள்ளார். இது தய சாதிக்கும் பாரத சாதிக்கும் விடுத்த எச்சரிக்கையாகும். இதற்கு வமி என்க. ' பாரதியே வழிகாட்டுகிறார். தமிழ் மக்களிடையில் அறிவுத் துறையிய தலைமையாய் உள்ளவர்களிடம் இரு பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு பிரிவு மேலை நாட்டு நாகரிகமே சிறந்தது என அதைத் தழுவிச் சென்று தமிழை மறத்தல், மற்றொன்று வெறும் பழமை பேசி பாசி படிந்த நாசப் புலவ என்று குறிப்பிடுகிறார். பாரதி காலத்தில் இந்தப் பிரிவுகள் இரண்டும் தமிழகத்தில் வலுவாக இருந்தன. இப்போது சிறிது சிறிது மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும சீரான நிலை அடைவதற்கு நாம் இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, "நன்மையும் அறிவும் எத்திசைத் தெனிலும யாவரே காட்டினும் மற்றவை தழுவி வாழ் வீராயின் அச்சமொன்றில்லை" என்னும் அருமையானதொரு பொதுக் கருத்தை பொருத்தமான முறையில் பாரதி எடுத்துக் காட்டியுள்ளார். பாரத சிந்தனை வழியில் நின்று நாம் உலகை காண வேண்டும். உலகை அறிந்து கொள்ள வேண்டும். பாரதியின் உலகளாவிய தத்துவம் பாரதியின் தத்துவம் உலகளாவிய தத்துவமாகும். உலகக் கண்ணோட் ப கொண்டதாகும். மனித சமுதாயத்தையும் இதர உயிர் பொருள்கள் மற்றும இயற்கைப் பொருள்கள் அனைத்தையும் உள்ளிட்டதாகும். பஞ்சபூத சக்திகளுடனும் சூரிய சந்திர, நட்சத்திரங்கள் மற்றும் கிரக சக்திகளு து இணைந்து வாழ்வதாகும். உலகமனைத்தும், உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும்