பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் எழுத்துப் பணிகளில். பத்திரிகை ஆசிரியராக இருந்த காலத்தில் கட்சி மற்றும் தொழிற் சங்கப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பல முக்கிய அரசியல், பொருளாதாரம். இலக்கியம் மற்றும் தத்துவ ஞானம் மற்றும் தொழிலாளர். விவசாயிகள் பற்றியப்பிரச்சினைகள் பற்றிய பல கட்டுரைகள் எழுதிவந்ததுடன், அரசியல், வரலாறு, பொருளாதாரம், தத்துவஞானம், சர்வதேசப் பிரச்சினைகள் முதலியவை பற்றிய பல தலைப்புகளிலான நூல்கள் மொழி பெயர்ப்பு (தமிழாக்கம்) செய்தும், மூல நூல்கள் எழுதியும் அவை வெளியாகியுள்ளன. காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, மார்க்சிய லெனினிய தத்துவ ஞானப் பிரச்சினைகள் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள், ஐக்கிய முன்னணித்தந்திரம், மார்க்சீயதத்துவம், வரலாற்றியல் பொருள் முதல்வாதம், மார்க்சீயமும் பகவத் கீதையும் முதலியன அவர் தமிழாக்கம் செய்துள்ள முக்கியமான பெரிய நூல்களாகும். மற்றும் மார்க்சீய பொருளாதார தத்துவம், ஜீவாவின் தமிழ்ப் பணிகள், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி ஆகிய தலைப்புகளில் மூல நூல்கள் எழுதியுள்ளார். இந்த மூன்று நூல்களுக்கும் முறையே பேராசிரியர் வானமாமலை பேராசிரியர் சஞ்சீவி, பேராசிரியர் நா.தர்மராஜன் ஆகியோர் முன்னுரை எழுதி பாராட்டியுள்ளனர். இவ்வாறு திரு.அ.சீனிவாசன் அப்போது எழுதி வெளியான நூல்கள் சுமார் பதினேழாயிரம் பக்கங்களுக்கு மேலாகும். இவை திரு. அ. சீனிவாசன் அவர்களுடைய எழுத்துப் பணிகளில் அமைதியான சாதனையாகும். விருதுகள் திரு. அ. சீனிவாசன் தனது சிறந்த எழுத்துப் பணி சாதனைகளுக்காக சென்னை பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் நேது. சுந்தரவடிவேலு அவர்கள் தலைமையில் சோவியத் நாடு நேரு விருதும், சிறந்த பத்திரிகைப் பணிகளுக்காக, சமாதானம் சோஷலிஸம் பற்றிய பிரச்சினைகள் என்னும் சர்வதேசப்பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் சிறந்த பத்திரிகையாளர் என்னும் கெளரவப் பட்டயமும் பெற்றுள்ளார். அத்துடன் அண்மையில் பாரதி தொடர்பாக அவர் எழுதியுள்ள நூல்களும் தனியார் விருதுகளைப் பெற்றுள்ளன. தேர்தல்களில் பங்கு 1950ஆம் ஆண்டுகளின் கடைசியில் திரு. அ. சீனிவாசன் இராஜபாளையம் நகரசபைத் தேர்தலில் வார்டு உறுப்பினர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறுப்பினராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். 98 1984ஆம் ஆண்டிலும் 1991ஆம் ஆண்டிலும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் சிவகாசி பாராளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திரு. அ. சீனிவாசன் போட்டியிட்டு ஒவ்வொரு தடவையிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருதடவைகளிலும் முறையே இந்திரா காந்தி படுகொலை, ராஜிவ் காந்தி படுகொலை, அதனால் ஏற்பட்ட அனுதாப அலை அவருக்கு பாதகமாக இருந்தது. திரு. அ. சீனிவாசன் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நூலாசிரியர், சிறந்த பேச்சாளர், இராணுவ சேவை அனுபவம் பெற்றவர். பல நாடுகளுக்கும், இந்திய நாட்டின் பல மாநிலங்களுக்கும் சென்று சுற்றுப் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு. மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் அறிந்தவர்.இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் 1948 - 50ஆம் ஆண்டு காலத்தில் கடுமையானபோலீஸ் அடக்குமுறைக்கும் சித்திரவதைக்கும் கொடுமையான சிறைவாசத்திற்கும் உட்பட்டு மதுரை. சேலம் சிறைகளில் கடும் தண்டனை அனுபவித்து தியாகத் தழும்புகள் ஏறியவர். இலக்கிய அனுபவம் திரு.அ.சீனிவாசன் ஏற்கனவே தனது குழந்தைப் பிராயத்திலிருந்தே தனது தாய் தந்தையர் மூலம் இராமாயணம், மகாபாரதம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், நளவெண்பா.இராமனுஜருடைய தத்துவங்கள் முதலியவை பற்றி அறிமுகமானவர். விடுதலை இயக்கத்தின் ஆதர்சத்தில் பள்ளிப் படிப்பு காலத்தில், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, விவேகானந்தர் நூல்கள். அவர்களைப் பற்றிய செய்திகள், ஆனந்த மடம் முதலிய பங்கிம் சந்திரர், மற்றும் சரத் சந்திரர் நாவல்கள், கல்கி நாவல்கள் மணிக்கொடி கதைகள் முதலிய இலக்கியங்களிலும் அறிமுகமாகி நாட்டுப்பற்றை வளர்த்துக்கொண்டவர். சுதந்திரப்போராட்டகாலத்தில் தீவிர வாதக் கருத்துகளுக்கு ஆதரவான சிந்தனைப் போக்குகளைக் கொண்டிருந்தார். பாரதி, விவேகானந்தர் ஆகியோரின் இந்திய சிந்தனைப் போக்கு அவரை மிகவும் கவர்ந்தது. அதன் பெருமிதத்தைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டிருந்தார். திரு. அ. சீனிவாசன், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டபோது கம்யூனிஸ்ட் இலக்கியங்களையும் குறிப்பாக மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மூல நூல்களை ஆழ்ந்து படித்தார். அப்போது, இயற்கை சமுதாயம், தனி மனித