பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாரதிதாசன்

அத்தான்் எழுந்தான்் அரைநொடியிற் பல்துலக்கிப் பொத்தல்நாற் காலியின்மேற் பொத்தென்று குந்தினான், உள்ளே எழுந்தபடி ஓவென்று கூச்சலிட்டான், பிள்ளை நிலைகண்டும் பெற்றோர் அருகிருந்தும் கொல்லைக் கிணற்றில் குடிதண்ணி மொண்டிருந்த மெல்லி விரைந்துவந்து மேலே எடுத்துவிட்டாள்.

புண்பட்டதோஎன்று பூவையவள் பார்க்கையிலே கண்கெட்டதுண்டோ? கடிய நீ ஓடிவந்து தூக்கினால் என்ன? தொலைந்துபோஎன்றுரைத்துத் தாக்கினாள், தையல் தலைசாய வீழ்ந்தெழுந்தாள்.

普 骨 普

அப்போது மாமி அருமை மகனிடத்தில் கொப்பேறிக் குந்தும் குரங்குபோல் உன் மனைவி மேலேறிக் குந்தியே நாற்காலி மேற்பிரம்பைக் கேலி பிறச் செய்யக் கிழித்துத் தொலைத்துவிட்டாள் என்றாள். அருகில் இருந்திட்ட மாமனோ நின்றால் அடித்திடுவான் நீபோ என்றே உரைக்க அப்படியே பிள்ளையும் ஐந்தாறு தந்திடவே பொற்பாவை கண்ணிற் புனல்சாய உட்சென்றாள்.

骨 * 骨

மாலை ஒருமணிக்கு மங்கை அடுப்பருகில் வேலைசெய்யும் போது முற்பகுதி வீட்டறையில் எண்ணெய்ஏ னத்தை எலிஉருட்டிப் போயிருக்கப்