பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 9

எண்ணம்வே றாகி இருக்கின்றேன் நான் என்று கண்ணை அவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான்.

丈 太 *

பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என்கின்றீரோ? மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே; ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான்் ஆடவர்க்கும் உண்டு. புலன் அற்ற பேதையாய்ப் பெண்ணைச்செய்தால்அந் 6O நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே சித்ரநிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரத நற் புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது? சற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ்சீவிமலை உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன் மூலிகையைத் தேட முடியாவிட்டால், மலையின் மேலிருந்து கீழே விழந்திறக்க நானறிவேன்! ஊரிலுள்ள பெண்களெலாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும் சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார். தோகைமயிலே! இதை நீகேள் சொல்லுகின்றேன். 7Ο நாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு. பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல்வேன்' என்றாள்.

- xr x“ ★ 'அச்சுப் பதுமையே! ஆரணங்கே! நில்லேடி! நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே! ஏனிந்தக் கோபம்? எழிலான காதலியே! என்று குப்பன் ஓடி இளவஞ்சியைத் தழுவி நின்றான், இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள்;