பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட நம்பிக்கை

காக்கைசொல் நம்பிக் காசைமட்டும் போக்கடிக்காதே

காக்கை இறைப்பில் சுத்திக் கிடந்தது. வீட்டுக் காரன், கேட்டு வருந்தினான். பறந்தது காக்கை; சிறிதுநேரத்தில் மறந்த நண்பன் வந்தான்் விருந்தாய்! மற்றும் ஒருநாள், ஒன்பது பேர்கள், வரலா னார்கள். வருவதன் முன்பு காக்கை எதுவும் கத்தவேயில்லை. o காக்கை மறந்ததாய்க் கருதினான் வீட்டினன். ஒருநாள் காக்கை ஓயாது கத்தவே வரும் விருந்தென்று வழிபார்த் திருந்தான்். அஞ்சு மணிவரை ஆருமே வருகிலர் அஞ்சல் வந்த அயலூ ரினின்றும் ஒருவன் வருவதும், ஒலை வருவதும் சரிநிகர் என்று தான்்நினைத் திருந்தான்். நானை வருவதாய் நண்பன் ஒருவன் ஆள் ஒருவனிடம் அஞ்சல் அனுப்பினான். மறுநாள் காக்கையும் வாய்ப்பறை அறைய அறிவித்தபடி அவனும் வந்தான்். மாரியம்மன் தேருக்கு நண்பன் காரூரினின்று கடிது வருவான் என்று நினைந்துகொண்டிருந்தான்் வீட்டினன்.