பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைய பாடல்கள 17

நம்புங்கள் மெய்யாய் நடக்கும் விஷயங்களிவை சம்பவித்த உண்மை அசம்பவத்தால் தாக்குறுமோ? வாழ்க்கை நதிக்கு, வீண் வார்த்தைமலையும்தடையோ? வாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தைப் பொய்யுரைப்பார் இந்தப் புவியை ஒரு சிற்றெறும்பு கையால் எடுத்ததென்பார் ஐயோஎன்று அஞ்சுவதோ? முத்தத்தைக் கொள்க முழுப்பயத்தில் ஒப்படைத்த சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில் என்றுரைத்தாள் வஞ்சி. இதனால் பயனில்லை; குன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம் அழிந்தான்்.

★ ★ x இந்நேரம் போயிருப்பார் இந்நேரம் பேர்த்தெடுப்பார்! இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்; உஸஎன்று கேட்குதுபார் ஓர்சத்தம்வானத்தில்; விஸ்வரூபங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார்.

xr ★ ★ இம்மொழிகேட்டான் குப்பன், ஐயோ என உரைத்தான்் அம்மட்டும் சொல்லத்தான்் ஆயிற்றுக் குப்பனுக்கே உண்மை அறிந்தும் உரைக்காதிருக்கின்ற பெண்ணான வஞ்சிதான்் பின்னும் சிரிதது 'மனதை விடாதீர் மணாளரே காதில் இனிவிழப் போவதையும் கேளுங்கள் என்றுரைத்தாள். வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில் நெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்;

★ x 大 'இப்படியாகஅநுமார் எழும்பிப் போய் அப்போது ஐாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல் சஞ்சீவிப் பர்வதத்தைத்தாவிப் பறந்ததுமே