பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவி

(பில்கணியம் என்ற வடமொழி நூலைத் தழுவியது)

அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்; 'அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்! தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள் அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்; ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்; அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள் கவிதை புனையக் கற்றாள் இல்லை. மலரும், பாடும் வண்டும், தளிரும், மலையும், கடலும், வாவியும், ஓடையும். விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும், தமிழின் அமுதத் தன்மையும் கவர்வன, அதனால் என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்த துதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்! ஏற்றதோர் ஆசான் எங்குளான்? தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!

தலைமை அமைச்சன் புகல்வான்; எனது மன்னா,

சகலகலை வல்லவன்; இவ்வுலகோர் போற்றும்

புலவன்; உயர்கவிஞன், அவன்பேர் உதாரன்!

புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன்.

இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்!

எனினும், அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்.