பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 27

உன்னை எனது இருவிழியாற் காணுகின்றேன்;

ஒளிபெறுகின்றேன்; இருளை ஒதுக்குகின்றேன்; இன்னலெலாம் தவிர்க்கின்றேன்; புறமும் உள்ளும்! எரிவில்லை குளிர்கின்றேன்; புறமும் உள்ளும்! அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி

ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்! இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!

எனை இழந்தேன், உன்னெழிலில் கலந்ததாலே!

இவ்விதமாக உதாரனும்-தனது இன்குரலால் வெண்ணிலாவையே திவ்விய வர்ணனை பாடவே-செவி தேக்கிய கன்னங் கருங்குயில், 'அவ்அறிஞன் கவி வல்லவன்-விழி அற்றவனாயின், நிலாவினை எவ்வி தம் பார்த்தனன், பாடினன்?-இதில் எத்துக்கள் உண்டென ஓடியே,

சாதுரியச் சொல் உதாரனை-அவன் தாரைக் கண்ணொடும் கண்டனள்! ஒதுமலைக்குலம்போலவே-அவன் ஓங்கிய தோள்களைக் கண்டனள்! 'ஏதிது போல் ஓர்ஆண்எழில்-குறை இன்றித் திருந்திய சித்திரம் சோதி நிலாவுக்கும் மாசுண்டாம்-இச் சுந்தரனோ கறை ஒன்றிலான்!

என்று வியப்புடன் நின்றனள்;-அந்த ஏந்திழை தன்னெதிர் நின்றதைத் தன்னிகரற்ற உதாரனும்-கண்டு தன்னை மறந்தவனாகியே