பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாரதிதாசன்

அரசென ஒருசாதி-அதற் கயலென வேறொரு சாதியுண்டோ? கரிசன நால் வருணம்-தனைக் காத்திடும் கருத்தெனில், இலக்கணந்தான்் தரும்படி அவனை இங்கே-நீ தருவித்த வகையது சரிதான்ோ?

என்மனம் காதலனைச்-சென் றிழுத்தபின் னேஅவன் இணங்கினதால் அன்னவன் பிழையில னாம்!-அதற் கணங்கெனைத் தண்டித்தல் முறை யெனினும் மன்னநின் ஒருமகள் நான்-எனை வருத்திட உனக்கதிகாரமில்லை! உன்குடிக் கூறிழைத் தான்்-எனில் ஊர்மக்கள் இடம் அதை உரைத்தல் கடன்!

என்றுபற் பல வார்த்தை-வான் இடியென உரைத்துமின்னென நகைத்தே முன்னின்ற கொலைஞர் வசம்-நின்ற முழுதுணர் கவிஞனைத்-தனதுயிரை மென்மலர்க் கரத்தாலே-சென்று மீட்டனள் வெடுக்கெனத் தாட்டி கத்தால். மன்னவன் இருவிழியும்-பொறி so வழங்கிட எழுந்தனன், மொழிந்திடுவான்;

'நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்-கெட்ட நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே!-இந்தப் பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும் பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்-என் தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த