பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாரதிதாசன்

கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்:

காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்! 'புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று

போயுரைப்பாய்' என்றார்கள் போகா முன்பே, செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்!

செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!

நலிவில்லை! நலமெலாம் வாய்ந்த தங்கே!

Ο Ο Ο 1937