பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50' பாரதிதாசன்

மந்திரி : மணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி இல்லை! அணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்! பாடகர் பாடிலர் பதுமம் போன்ற ஆடவர் முகங்கள் அழகு குன்றின! வீதியில் தோரணம் விளங்கவில்லை! சோதி குறைந்தன. தொல்நகர் வீடுகள்! அரச குலத்தோர் அகம்கொத்தினர்! முரசம் எங்கும் முழங்குதல் இல்லை! சேனாபதி : எனக்குப் பட்டம் என்றதும், மக்கள் மனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா? அராஜகம் ஒன்றும் அணுகா வண்ணம் இராஜக சேவகர் ஏற்றது செய்க! வெள்ளி நாட்டு வேந்தன் வரவை வள்ளி நாட்டு மகிபன் வரவைக் கொன்றை நாட்டுக் கோமான் வரவைக் ஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும் போற்றியும் புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும் தீதற நாளைநான் திருமுடிபுனைய ஆதரவளிக்க அனைத்தும் புரிக!

மந்திரி : ஆரவாரம் அதுகேட்டாயா? பாராள் வேந்தர் பலரும் வரும்ஒலி!

சேனாபதி :

லிகிதம் கண்ட மன்னர் சகலரும் வருகிறார் சகலமும் புரிக நீ!