பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 55

ஏடா சுதர்மா இவன்யார் நரைக்கிழவன்? கேடகமும் கத்தியும்ஏன்? கெட்டழியத்தக்கவனே!

சுதர்மன் :

எந்நாட்டை நான் ஆள ஏற்ற கலையுதவும் தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர். ஆசிரியர்!

சேனாபதி :

உன்நாட்டை நீ அள ஒண்ணுமோ சொல்லடா?

சுதர்மன் :

என்நாட்டை நான் ஆள்வேன்! எள்ளளவும் ஐயமில்லை!

(சேனாபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன்மேல் ஓங்கியபடி கூறுவான்)

உன்நாடு சாக்காடே ஓடி மறைவாய் பார்!

மின்னுகின்ற வாள் இதுதான்்! வீச்சும் இதுவே!

(கிழவர் கணத்தில், சேனாபதி ஓங்கிய வாளைத் தமது வாளி னால் துண்டித்துக் கூறுவார்.)

உருவியவாள் எங்கே? உனதுடல்மேல் என்வாள்

வருகுதுபார், மானங்கொள்! இன்றேல் புறங்காட்டு:

(என ബ് லாவகத்தோடு ஓங்கவே சேனாபதி தன்னைக்