பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாரதிதாசன்

தலைவி

பிரியாதுன்பால் பெற்ற இன்பத்தை நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது! வாழையடிவாழைஎன வந்தஎன் மாண்பு வாழிய சென்று வருக என்றது. -

(தலைவன் தலைவியை ஆரத் தழுவிப் பிரியா உளத்தோடு பிரிந்து செல்கிறான்.)

3

(பகைவன் வாளொடு போர்க்களத்தில் எதிர்ப்படுகின்றான்; வாளை உருவுகின்றான். தன்லவனும் வாளை உருவினான்.)

தலைவன்

பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின் மாப்புகழ் மறவரின் வழிவந்தவன்நான்! என்வாள் உன்உயிரிருக்கும் உடலைச் சின்ன பின்னம் செய்ய வல்லது! வாளை எடுநின் வல்லமை காட்டுக.

4

(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்கிறான்.)

தலைவன்

ஆஎன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே! (தரையில் வீழ்ந்து, நாற்றிசையும் பார்க்கிறான்.)