பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பது சுவை

1
உவகை

(இரவு! அவள் மாடியில் நின்றபடி, தான் வரச் சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள். அவன் வருகின்றான்.)

காதலன்

என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என் உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்.
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்.
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை,
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நூலே னியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சம் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும்என்கை நோக்கி!

(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.) வா பறந்து! வா வா மயிலே! (அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)

காதலன்

வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!
ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற!