பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 75

மண்ணாங்கட்டி :

எந்தத் திசையில் இருக்கின்றாள்பெண்? புரோகிதன் :

வடகிழக்கில் மணப்பெண் கிடைப்பாள். தொலைவில் அல்ல தொண்ணுறு கல்லில்.

மண்ணாங்கட்டி :

அப்படியானால் அரசலூர் தான்ா? புரோகிதன் :

இருக்கலாம் இருக்கலாம் ஏன் இருக்காது?

வெள்ளையப்பன் :

எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே? மண்ணாங்கட்டி :

எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்?

வெள்ளையப்பன் :

யான் மட்டும்போகவா? இருவரும்போகவா? புரோகிதன் :

நாளைக் காலையில் நாலு மணிக்கு நீவிர் மட்டும்போவது நேர்மை: நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும்.