பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாரதிதாசன்

என்விருப்பத்தை, எதிர்க்கவும் துணிந்தாய். உன்விருப் பத்தால் என்ன முடியும்? இன்று தொட்டுநீவாயிலின் வழியும் காலெடுத்து வைக்க வேண்டாம். என்றன் சொத்தில் இம்மியும் அடையாய். நான்சொன்னபடி நடந்து கொண்டால், திருமணம் பிறகு செய்து வைப்பேன். அம்மாக் கண்ணின் அழகு மகனே இந்நாள் இந்த எழில் மடந்தையை மணந்துகொள்ளட்டும், மறுக்க வேண்டாம்.

நல்லமுத்து:

திருமணம் எனது விருப்ப மாகும். ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தல் திருமணம் என்க. இரிசனார் மகளும் என்னை உயிரென எண்ணி விட்டாள். நானும் என்னை நங்கைக் களித்தேன். உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன். உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன். நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள் ஏனமும் கையுமாய், எம்நிலை கூறி ஒருசாண் வயிற்றை ஓம்புதல் அரிதோ! ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடுப்பால் துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார். இழுக்குறும் இந்நிலை இடரவேண்டி நானும்என் துணவிையும் நாளும் முயல்வதில் சிறைப்படல், காதல் தேனருந்துவதாம்!