பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விடுதலை

கிழக்கு வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம் வழக்கப் படி, வீட்டு வாயிற் படி துலக்கிக் கோலமிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே ஏழுமணிக் காலை எழுந்தாள். அவள் மாமி, வாழுகின்ற பெண்ணாநீ வாடிஎன்றாள் தங்கத்தை, இந்நேரம் தூங்கி இருந்தாயா? என் பிள்ளை எந்நேரம் காத்திருப்பான் இட்டலிக்கும் காப்பிக்கும்? நின்றபொற் பாவை நிலத்தில் விழச்செய்தாள்.

骨 炼 骨

வாரிச் சுருட்டி மலர்க்குழலைத் தான்் செருகிக் கூரிய வேல்விழியாள் கொண்டதுயர் காட்டாமல் தொட்ட பணிமுடிந்துச் சுள்ளி அடுப்பேற்றி இட்டலியும் பச்சடியும் இட்டஒரு தட்டுடனும், காப்பி யுடனும் கணவன் தனி அறையில் போய்ப்பார்த்தாள் இன்னும் பொழுது விடியவில்லை என்று நினைத்தே இருவிழி திறக்காமல் பன்றிபோல் பாயில் படுத்துப் புரளுகின்ற அத்தான்் நிலைகண்டாள். அந்தசொல் தான்்நினையாள் முத்தான் வாய்திறந்து மொய்குழலாள் கூறலுற்றாள்: எட்டு மணி அத்தான்் எழுந்திருப்பீர். தந்தையார் திட்டுவார், கண்கள் திறப்பீர் விரைவாகக்