பக்கம்:பாரதித் தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாரதி தமிழ்

தொழிற்சாலைகள் எல்லாம் பார்த்தாய் விட்டது. வெளி நகரங்களுக்கு சீக்கிரத்தில் போய் வருவேன்.

நெசவு சம்பந்தமான பலவகைத் தொழில் களிலே நான் பாரத தேசத்திற்குத் திரும்பி வந்த பிறகு அங்கே என்ன தொழில் தொடங்கலாமென் பதைக் குறித்து இங்கிருந்து எவ்விதமான தீர்மான மும் செய்ய முடியாது அங்கு வந்த பிறகுதான் பார்க்கவேண்டும். நமது நாட்டு முதலாளிகள் கொடுக்கும் உதவிக்குத் தகுந்தபடிதான் தொழில்

செய்ய முடியும்.

ஒரு ஜப்பானிய சாஸ்திரியின் உபதேசம், இந்த விஷயமாக எனது கலாசாலைத் தலைவரிடம் ஆலோசனை செய்தேன். அவர் சொல்லியதென்ன வென்றால்:

‘நூற்புத் தொழிலுக்கு நல்ல முதல் போட்டுப் பெரிதாக நடத்தினுல்தான் லாபமுண்டாகும். வேலையும் லெளகரியமாக நடக்கும். நெசவுத் தொழில் அப்படியில்லை. அதிலே, சரக்கு நயத் துக்குத் தக்கபடி தொழிற்சாலையைப் பெரிதாகவோ றிதாகவோ தொடங்கிவிடலாம். இந்தியாவிலே தொழிற் பண்டிதரும் கை தேர்ந்த தொழிலாளி களும் கிடைப்பது அருமையாதலால், ஆரம்பத் திலேயே நீராவி, மின்சாரம் முதலிய சக்திகளைக் கொண்டு வேலை தொடங்குதல் லெளகரியப்படாது. சேதமும், உற்பத்திக் குற்ைவும் அதிகமாக உண்டா கும். விசேஷமாகப் பட்டுத் தறிகள் வைப்போர் இவ்விஷயத்தில் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.

ஆரம்பத்திலே உயர்ந்த கைத்தறிகள் வைத்து மெல்லிய, சாதாரண, அல்லது கனமான, எந்தமாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/149&oldid=605416" இலிருந்து மீள்விக்கப்பட்டது