பக்கம்:பாரதித் தமிழ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல்லாஸ் சபை 16?

ஜித்தாமியான் சேட் : எனக்கு அதுவே சம் மதம்.

குமாரசாமி வாத்தியார் : எனக்கும் அப்படியே.

சபையாரின் பொது வேண்டுகோளின்படி காளிதாஸன் அக்கிராசனம் வகித்தார்.

எலிக்குஞ்சு செட்டியார் : சபாநாயகரே, விவ காரம் ஆரம்பிக்கலாமா?

சபாநாயகர் : அப்படியே செய்யலாம்.

எ லிக்குஞ் ச. செட்டிய i : இ ந் த க் காளி தாலரை நமது சபையைவிட்டு நீக்கிவிட வேண்டு மென்று நான் விரும்புகிறேன். இதைச் சபையார்

அங்கீகாரம் செய்ய வேண்டும்.

குமாரசாமி வாத்தியார் : ஏன் காணும், செட்டி. யாரே என்ன காரணம்?

ஜி.ந்தாமியான் சேட் : செட்டியார் மனத்தில் இந்தக் கருத்திருக்கும்போது அவர் காளிதாஸரை இன்று சபாநாயகராக இருக்கும்படி கேட்டது கேலி தானே? நமது சபையில் இப்படி நாணயக் குறை வான கேலிகள் செய்வதைப் பார்த்தால் எனக்கு அருவருப்புண்டாகிறது.

எ லிக்குஞ்சு செட்டியார் : நாணயக் குறைவா? யாருக்குக் காணும் நாணயக் குறைவு? சாஹப், உம்முடைய மஹம்மதிய குணங்களை நம்மிடம் காட்ட வேண்டாம் தெரியுமா?

ஜி.ந்தாமியான் ரேட் : செட்டியாரே, அதிக வார்த்தை பேசிவிட்டீர். ஒரு தரம் பொறுத்தேன். ஹோஷ்யார்! (ஜாக்ரதை!)

எலிக்குஞ்சு செட்டியார் : என்ன ஸாஹப், தாடியை உருவுகிறீரே, அடித்துப் போடுவீரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/166&oldid=605443" இலிருந்து மீள்விக்கப்பட்டது