பக்கம்:பாரதித் தமிழ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லோகோபகாரம் 215

- م۔ سم. --۔-بی.

லன்று; இந்த ஜன்மத்திலேயே திரும்பி வரும். இது கண்ணுலே கண்ட செய்தி. செல்வம், புகழ், துணை. வினையேற்றம் முதலிய எந்த நலத்தை ஒருவன் விரும்பினபோதிலும், பிறர்க்கு நன்மை செய்யா விட்டால் அது கைகூடாது. அனுபவத்திலே பார்த்துக் கொள்ளலாம். குடும்பத்தைக் காப்பவன், ஊருக்கு நலஞ் செய்வோன் இவர்கள் உண்டு வாழ்ந் திருப்பதனுல் உலகத்துக்கு நன்மையன்றாே? நீ பிறரைக் காப்பாற்றினுல் தெய்வம் உன்னைக் காபபாறறும.

தெய்வம் உண்டு. ‘நலஞ் செய்வோன் என்றும் கெட்ட வழி சேரமாட்டான்’ என்று ைேத சொல்லு கிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவ னுடைய யோக கேமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித்திருக்கிறது. ஆனல் ஆரம்பத் திலே சோதனைகள் நேரிடும். மனந்தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனல் பிறகு சோதனைகள் நின்றுபோய் நன்மை உதயமாகும். லோகோபகாரத்திலே “ஆரம்பத்தில்’ ம ன த் தளர்ச்சி ஏற்படுவது சகஜம்.

‘ஏதடா இது! தெய்வத்தை நம்பி, தெய்வமே கர்த்தா, நாம் கருவி யென்று நிச்சயித்து மற்றவர் களுக்கு நன்மை செய்யப் போன இடத்தில் நமக்குத் தீமையுண்டாகிறதே! கிணறு வெட்டப்போன இடத் தில் பூதம் புறப்படுகிறதே! உலகத்தைக் கிளியென்று நினைத்து அதன் பசி தீரப் பால் வார்க்கும்படி போளுல் அது கழுகாக மாறி நம்மைக் கொத்து கிறதே!’ என்று திகைத்துப் போய் மனிதன் லோகோபகாரத்தைக் கைவிடக்கருதல் ஸாமான்யம். இது தவறு. தெய்வம் நமக்குத் தகுதி யேறும் பொருட்டாக நம்மைச் சோதனை செய்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/214&oldid=605517" இலிருந்து மீள்விக்கப்பட்டது