பக்கம்:பாரதித் தமிழ்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பாரதி தமிழ்

பரத்திலே மோrமும் உண்டு. திருவள்ளுவர் எங்கள் குலத்தில் வளர்ந்தார்.”

இங்ஙனம் அவன் பேசிக்கொண்டு போகையில் சக்ரவர்த்தி சேஷய்யங்கார் அவனை நோக்கி, “உனக்கு வயதென்ன?’ என்று கேட்டார்.

“நீங்களே சொல்லுங்கள். எனக்கு வயதெவ் வளவிருக்கலாம்?’ என்று கிழச் சாம்பான் திருப்பிக் கேட்டான்.

‘அறுபதிருக்கும்?’ என்றார் அய்யங்கார். “என்னைப் பார்த்தவர்களெல்லாம் ஐம்பதறுபது வயதென்றுதான் மதிக்கிறார்கள். ஆனல் எனக்கு எண்பது பிராயமாய் விட்டது. இந்தப் பாலம் கட்டினபோது எனக்குத்தெரியும். அந்தக் காலத் தில் நான் இருவது வயதுப் பிள்ளை. நானும் இதில் வேலை செய்தேன். நித்தம் மூன்றணுக் கூலி’ என்று கிழவன் சொன்னன்.

‘இப்போது உனக்கு ஜீவனம் சுகமாக நடந்து வருகிறதா?” என்று அய்யங்கார் கேட்டார்.

“சுகந்தான் சாமி. இரண்டு பெண்ணும் ஒரு பிள்ளையும் கடவுள் கொடுத்திருக்கிரு.ர். இரண்டு பெண்னையும் சரியான இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டேன். மகன் பயிர்த் தொழில் செய்கிருன். நான் மாட்டு வண்டி வைத்திருக்கிறேன். கடலோரத் துக்குக் கிடங்குகளிலிருந்து சரக்கேற்றி வந்தால் வியாபாரிகள் கூலி கொடுப்பார்கள். அதில் எனக் குக் கூடியவரை சரியான வரும்படி கிடைத்து வரு கிறது. இப்போது சண்டையினல் மணிலாக் கொட்டை ஏற்றுமதி குறைந்திருக்கிறது. அதனல் எனக்கு வரும்படியில்லாமலிருக்கிறது. இருந்தா ஆலும், கடவுள் கிருபையால் போஜனத்துக்குக் கஷ்ட மில்லை’ என்று கிழச் சாம்பான் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/257&oldid=605583" இலிருந்து மீள்விக்கப்பட்டது