பக்கம்:பாரதித் தமிழ்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ராயச்சித்தம் .281

குலமாய்க் கெட்டுப் போவார்களென்று சொல்லு கிறது. யதார்த்தம் அப்படியில்லை. ப்ரஹ்மாண்ட புராணத்தில் நான் ஒரு சுலோகம் படித்தேன். அது இப்போது ஞாபகமில்லை. அதிலே என்ன போட்டிருக்கிறதென்றால் கலியுகத்திலேயே ஒரு கிருதயுகம் வரும் என்று போட்டிருக்கிறது. கலி முற்றி உலகம் நாசமாய்ப் போகுமென்ற வாக்யங் களை நான் சோதனை போட்டுப் பார்த்திருக்கிறேன். அவற்றை யெல்லாம் காட்டிலும் மேற்படி ப்ரஹ் மாண்ட புராண வாக்யமே ப்ரமாணமென்று நான் நிச்சயமாக ருஜுப்படுத்துவேன். காளிதாஸரே, நீரும் அதை நம்பும். இதெல்லாம் ஏன் சொல்லு கிறேனென்றால் உம்முடைய ஸ்நேகிதர் ராமராயர் ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்ளப் போகிறதாகச் சொன்னீரே? அது அவசியமில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் கிருதயுகம் வந்து விடுமானல், அவருக்கு யாதொரு சிரமமுமில்லை. எல்லாரும் ஸ்மானம். அட, க்ருத யுகம் வரவேயில்லை; இந்தக் கலியுகமே சாசுவதமாக இருக்கப் போகிற தாக வைத்துக் கொள்வோம். அதிலும், அதிக மாகப் பொய் சொல்லாமல் இருப்பது விசேஷம். கலி தானகவே முற்றுவது போதாதென்று நாம் ஒரு பக்கம் அதைப் பொய் சொல்லிப் பழுக்க வைப்பதில் என்ன சுகம்: கடல் யாத்திரை பண்ணி ளுல் என்ன குடி முழுகிப் போச்சு? ஏன் காணும், காளிதாஸ்ரே, உம்மைத்தான் கேட்கிறேன். கடல் யாத்திரை பண்ணினுல் என்ன? இருக்கிற பிரா மணர்களெல்லாரும் ஸ்மிருதி வாக்யம் தவருதபடி தான் நடக்கிறார்களோ? நம்முடைய மாப்பிள்

ரங்கூனுக்குப் போய் அங்கே நல்ல கோடீசுவரனுக வாழ்கிருன். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்க ளுர், திருச்சினப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோண்ம் இத்யாதி rேத்ரங்களில் வளிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/280&oldid=605624" இலிருந்து மீள்விக்கப்பட்டது