பக்கம்:பாரதித் தமிழ்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 பாரதி தமிழ்

அவர்களே எவ்வகையிலும் புண்படுத்த மனமில்லா மல், ஸ்வ ஜனங்களென்ற அன்பு மிகுதியால் அவர் களே இயன்றவரை ஆதரித்துக் கொண்டும் வருகிறது. அபிப்ராய பேத முட்ைய்வர்களும் தேசாபிமானி களாக இருப்பாராயின், அவர்கள்ை நாம் மிக மதிப் புடன் நடத்த வேண்டுமென்ற நியாயத்துக்கு இத் தருணத்தில், சுதேசமித்திரன் பத்திரிகை ஓரிலக்கிய மாகத் திகழ்ந்து வருகிறது. இங்ஙனம் பெருந்தன்மை பாராட்டும் பத்திரிகையைக் கூட மஹாத்மா காந் யின் புது முறையை முற்றிலும் அனுஷ்டித்துத்திர வேண்டுமென்ற கருத்துண்ட்ய என் நண்பர். சிலர் பொதுமையும், தீர்க்காலோசனையுமின்றிப் பல வழி களிலே பழி கூறி வருவதைக் காணுமிடத்து எனக்கு மிகுந்த மன் வருத்த முண்டாகிறது. தேச பக்தர்களுக்குள்ளே முடிவான கொள்கைகளைப் பற்றியன்று: வெறுமே தற்கால அனுஷ்டானங்களைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டாகும் போது, உடனே பரஸ்பரம் ஸம்சயப்படுதலும் பழி துாற்று தலும் மிகக் கொடிய வழக்கங்களென்று நான் நிச்சயமாகவே கூற வல்லேன். இந்த நிலைமை என் மனதில், சில வைஷ்ணவர்களுக்குள்ளே வடகலை, தென்கலைச் சண்டைகள் நடப்பதையும், வீடு வெள்ளை பூசுதல் விஷயமான ஒரபிப்பிராய பேதத் தைக் கொண்டு தமக்குள்ளே சண்டை செய்து பிரியும் மதி கெட்ட ஸ்திரீ புருஷரின் நடையையும் நினைப்புறுத்துகிறது.

இந்தக் குணத்தை நம்மவர் அறவே விட்டொழி தாலன்றித் தற்காலம் இந்தியா இருக்கும் நிலையில், நாம் விடுதல்ைக்காகப் பொது முயற்சி செய்வதில் பல இடுக்கண்கள் விளையக் கூடும். எடுத்ததற் கெல்லாம் ஜாதிப்ரஷ்டம் செய்யத் தீர்மானிக்கும் குணத்தை நாம் ராஜாங்க விஷயங்களில் செலுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/367&oldid=605760" இலிருந்து மீள்விக்கப்பட்டது