பக்கம்:பாரதித் தமிழ்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 பாரதி தமிழ்

நிதி; அதிகாரிகளுக்கு விளக்கு. ஜனங்களுடைய நன் மைக்கிசைந்தவாறு அதிகாரிகள் நடக்கும்படி கவ னிக்க வேண்டியது அந்தப் பத்திரிகையின் கடமை. இந்த ராஜாங்கத்தை மாற்றி இதைக் காட்டிலும் தர்மமான ராஜாங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்று நாங்கள் முயற்சி செய்கிருேம். இதனிடையே இந்த அதிகாரிகள் எங்கள் வீடுகளில் தீயைக் கொளுத்தி ல்ை நாங்கள் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென்று “ஜஸ்டிஸ்’ பத் திராதிபரின் தர்க்க சாஸ்த்ரம் போதிக்கிறதா? நாங்கள் ராஜாங்கத்தைப் புதுப்பிக்க விரும்புவது பற்றி நாங்கள் இவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துவோம். இவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டனம் செய்துகொண்டிருப்போம். ஜனங்களுக் கெடுத்துக்காட்டி, அந்த உபாயத்தின் மூலமாக, இவர்கள் தங்கள் தவறுகளை நீக்கிக் கொள்ளும்படி. வற்புறுத்துவோம். ஜன கோபத்துக்கு இவர்கள் எப்போதும் அஞ்சித் திரவேண்டுமென்பதை நாம் அறிவோம். எனவே இவர்களுக்கும் நமக்குமிடையே நிகழ்ச்சி பெற்றுவரும் தர்ம யுத்தத்தில் அந்த அறிவைப் பயன்படுத்தாமல் விடமாட்டோம். எங்களுடைய தர்க்கம் ஜஸ்டிஸ்’ பத்திரிகைக்குத் தெளிவுபடுகிறதென்று நினைக்கிருேம்.

அன்னிய வஸ்து பஹறிஷ்காரம்

“ஹிந்து’ பத்திராதிபரிடம் ஜஸ்டிஸ்’ பத்தி ராதிபர் மற்றாெரு குற்றம் கண்டு பிடிக்கிறார் ஆதா வது, அன்ய் வஸ்து பஹிஷ்காரத்தை ஜனங்களுக்குப் ப்ோதித்துவிட்டுத் தாம் அன்ய வஸ்துக்களின் விளம்பரங்களுக்குத் தமது பத்திரிகையில் இடங் கொடுக்கிருரென்ற் குற்றம் சபாஷ்! - இந்தக் குற்றத்துக்காக ஹிந்து’ பத்திராதிபருக்குப் பெருந் தண்டம் விதிக்கலாம்! அதிலும் “ஜஸ்டிஸ்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/441&oldid=605876" இலிருந்து மீள்விக்கப்பட்டது