பக்கம்:பாரதித் தமிழ்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீப்பொறிகள்

காளிதாஸன்

14 பிப்ரவரி 192 ! ரெளத்திரி மாசி 3

பாரத தேசத்தாரின் அகத்தில் தழல் வீசி எரிந்து வரும் தேசபக்திப் பெருங்கனலின் பொறி கள் சில இங்கு காண்பிக்கப்படுகின்றன.

‘வில்லர்” ஸமாஜம்

பீலர் (Bhis) அல்லது வில்லர் எனப்படும் மலைக் குடிகள் ராஜபுத்ர ஸ்தானத்துச் சரித்திரத் தில் மிக்வும் கீர்த்தி பெற்றவர்கள். கல்வி முதலிய நாகரிகச் சின்னங்களில் இந்த ஜாதியார் மற்ற பாரதவாளிகளைக் காட்டிலும் குற்ைவுபட்டோராயி னும், வீரத்தன்மையில் ய்ார்க்கும் இளைத்தோரல்லர். புதிய ஸ்வதேசீயத் தீ இவர்களிடத்தும் பாய்ந்து விட்டது. எனவே இவர்கள் தோஹாத் என்ற ஊரில் ஒரு பெரிய தேசாபிமானக் கூட்டம் நடத்தி னர். அந்தக் கூட்டம் நடைபெருமல் தடுத்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் அதிகாரிகள் சில தினங்களின் முன்பு இக்கூட்டத்தாரின் குரு வாகிய குருகோவிந்தர் என்பவரைச் சிறைப்படுத்தி விட்டார்கள். அதனின்றும், அந்த ஸ்மாஜம் தடைப் படவில்லை. ப்ெப்ருவரி 6-ஆந் தே தி ய ன் று தோஹாதில் வில்லர்’ ஸ்மாஜம் கூடிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/459&oldid=605903" இலிருந்து மீள்விக்கப்பட்டது