பக்கம்:பாரதித் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாரதி தமிழ்

பாரதியாருக்குக் கிடைத்தது. அரசியல் கலப் பில்லாதவாறு எழுதுவதென்று ஏற்பாடாயிற்று. அதற்காக மாதம் முப்பது ரூபாய் பாரதியாருக்குச் đF t_{} ff}fr#ốT #_0,

“ரங்கசாமி ஐயங்கார் பாரதியாருக்கு முப்பது ருபாய்தான கொடுத்தார் என்று யாரும் அசட்டுத் தனமாகக் கேட்க வேண்டாம். ஐயங்கார் சுதேச மித்திரனை வாங்கி நடத்துகையில், அது நஷ்டத்தில் தான் நடந்து வந்தது. மேலும், அப்பொழுது முப் பது ரூபாய் என்பது இப்பொழுது நூறு ரூபாய்க்குச் சமானம். ஜீவாதாரமாக மாதம் முப்பது ரூபாய் பாரதியாருக்குக் கொடுத்து வந்து, அவரது பாடல் களைப் பிரசுரம் செய்த ரங்கசாமி ஐயங்காரைத் தமிழர்கள் எக்காலத்திலும் மறக்கலாகாது. அவ ரையும் அவரது ஜீவநாடியைப்போல் விளங்கி வந்த ளி. ஆர். பூரீநிவாசனையும் தமிழ்நாடு முழுமனத் துடன் பாராட்டி வாழ்த்த வேண்டியதுதான் நேர்மையான கடமையாகும்’ (வ. ரா.-மகாகவி பாரதியார்).

1907-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் நின்றுபோன பாரதியாரது கட்டுரைகள் சுதேசமித் திரனில் 1915-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மறு படியும் வெளிவரலாயின. 1915 ஜூன் 15-ல் எதிர் ஜர்மீன் என்ற கதை வெளியாயிற்று. பிறகு அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கிச்சடியைப் பார்க்கிருேம். 1916 பிப்ரவரியிலிருந்து தொடர்ந்து கட்டுரைகள் வர ஆரம்பிக்கின்றன. அதற்கு மேலேதான் மாதா மாதம் முப்பது ரூபாயும் நிச்சயமாக வ்ரத் தொடங்கி யிருக்கும். இடையே கழிந்த பல ஆண்டுகளில் அன் பர்கள் உதவியும், பாஞ்சாலி சபதம் ஜன்மபூமி முதலான நூல்களின் வெளியீட்டாலும், லோகோப காரி, ஞானபாது முதலிய பத்திரிகைகளுக்கு எழுதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/46&oldid=605904" இலிருந்து மீள்விக்கப்பட்டது