பக்கம்:பாரதித் தமிழ்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 பாரதி தமிழ் பாளேயத்துக்குப் போய்ச் சேருமுன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது. அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று கடி மனிதரும் ஒரு கழுத் தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிருேம்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குள்ளே கருங்கல்பாளையம் என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்தில் ஆண் மக்கள் எல் லோரும் மஹா யோக்கியர்கள், மஹா பக்திமான்கள்: புத்திக் கூர்மையிலும், சுறுசுறுப்பிலும், தேசாபி மானத்திலும் மிகவும் பாராட்டுதற்குரியவர்கள்.

இவர்களுடன் ஸல்லாபம் எனக்கு எல்லா வகை களிலும் இன்ப மயமாக இருந்தது.

அங்கே ஒரு புஸ்தகசாலை இருக்கிறது. வாசக சாஃப். அதன் காரியதரிசி ஒரு வக்கீல். மிக நல்ல மனிதர்; மஹா புத்திமான்; தேசபக்தியில் மிகவும் பாராட்டுதற்குரியவர்.

அந்த வாசகசாலை அவ்வூராரை நாகரிகப்படுத்து வதற்குப் பெரிதோர் சாதனமாக விளங்குகிறது. இங்ஙனம் அதனால் அவ்வூருக்குப் பலவித நன்மைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை கனம் நரசிம்மையர் (சேலம் வக்கீல்), ரீமான் வரதராஜுலு நாயுடு, பூரீ கல்யாணசுந்தர் முதலியார் முதலிய முக்கியஸ் தர்கள் தம் நற்சாசுதிப் பத்திரங்களாலே தெரிவித் திருக்கிறார்கள்.

இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னர்கள். எனக்கு ஒரு விஷயந்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/505&oldid=605976" இலிருந்து மீள்விக்கப்பட்டது