பக்கம்:பாரதித் தமிழ்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி தமிழ்

69


பாரதியார் பத்திரிகைச் சட்டத்தின் மூலமாகத் தமது முயற்சிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் தடுத்து விட்டதை உணர்கிறார். 1910 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்திலே அவருடைய பத்திரிகைகள் நின்று விடுகின்றன (இதுபற்றிய விவரம் அடுத்த பகுதியில் பார்க்க) அதற்குப் பிறகு அவருடைய உள்ளம் தேசீயப் பாடல்களும் அரசியல் கட்டுரைகளும் அல்லாத வேறு இலக்கியத் துறைகளிலே முக்கிய மாகச் செல்லுகிறது. அதற்கு முன்பும் அத்துறை களிலே அவர் கவனம் செலுத்தாமலில்லை. முன்பே பல பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பராசக்தி யும் கண்ணனும் முருகனும் அவர் சிந்தையிலே மாறாதிறூக்கிறிர்ககள். மேலும் ஞானரதம் போன்ற நூல்களுக்கு அடிகோலியிருக்கிறார். ஆனால் பெரிய தோரள்விலே 1910-க்குப் பிறகுதான் அவருடைய உள்ளம் அந்தத் துறைகளிலே செல்லுகிறது. கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலான இலக்கியங்களும், கதைகளும், கட்டுரை களும் தமிழுக்குச் சிறந்த புது அணிகளாகக் கிடைக் கின்றன. அவருடைய தேசீய உணர்ச்சி இந்த இலக்கியப் படைப்புக்களின் போதும் இடையிடையே மேலோங்குவதையும் நாம் காண்கிருேம். பாஞ்சாலி சபதத்திலே இதைத் தெளிவாகக் காணலாம். பாரதி யாரின் இறுதி மூச்சு வரை இந்த உணர்ச்சியின் வேகத்தை நாம் உணர்கிறோம். அவரது வாழ்க்கை யின் அந்திக் காலத்திலே சுதேசமித்திரன் உதவி யாசிரியராக மறுபடியும் அமர்ந்தபோதும் இதை உணர்கிறோம். ஆனால் அது பழைய பாரதி இடி முழக்கத்தின் எதிரொலி போலவே சற்று லேசாக நமக்குக் கேட்கிறது. நாட்டிற்கும், தமிழுக்கும் செய்யவேண்டிய தமது கடமைகளை மிகச் சிறந்த முறையிலே என்றும் அழியாதவாறு முன்பே பாரதியார்செய்து முடித்துவிட்டார். உடலொடுங் கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/69&oldid=1539907" இலிருந்து மீள்விக்கப்பட்டது