பக்கம்:பாரதித் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு

77


“தண்டனையடைந்த ஸ்ரீநிவாசன் என்பவர் சிறையில் நன்னடக்கையுடன் நடந்து கொண்டாரென்று ஒரு வருஷத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக வதந்தி. பாரதியார் சென்னையை விட்டுப் போனதற்குப் பிறகு இந்தியா பத்திரிகையும் சென்னையில் நின்றுவிட்டது.

திரு. எஸ். ஜி. ராமாநுஜலு நாயுடு மேலும் தரும் விவரங்களாவன: “இந்தியா பத்திரிகையுடன் பால பாரதம் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையும் வெகுதிறமையுடன் நடத்தினர்.”

புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு இந்தியா 1908 அக்டோபர் மத்தியிலிருந்து மறுபடியும் பழைய அளவில் வெளியாகிறது. இடையிலே சிறிது காலந்தான் இந்தியா நின்றிருக்கிறது. புதுச்சேரி சென்று பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பாரதியாரும் அவர் நண்பர்களும் முன்பே தீர்மானம் செய்துகொண்டது போலவே தோன்றுகிறது. அ த ன் ப டி யே ஸ்ரீநிவாசாசாரியாரும் புதுச்சேரி செல்லுகிறார்.

பாரதியார் புதுச்சேரி சேர்ந்த ஒரு மாத காலத்திற்குள் இவரும் அங்கு போய்ச்சேர்ந்தார். பத்திரிகையைப் புதுவையிலிருந்தே வெளியிடுவதென்று இருவரும் ஏற்பாடுகள் செய்தனர். “பிரெஞ்சுச்சட்டப்படி புதுவையில் ஒரு பத்திரிகை நட்த்த வேண்டுமானல், அதற்குப் பொறுப்பாளியாகப் பிரெஞ்சு இந்தியக் குடி ஒருவர் இருந்தாக வேண்டும். வில்வநல்லூரில் வசித்து வந்த ஸ்ரீ எஸ். லக்ஷ்மி நாராயணையர் என்பவர் அந்தப் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார். ஸ்ரீநிவாசாசாரியார் சென்னையில் வைத்திருந்த அதே அச்சுக்கூடத்தின் சாமான்கள் புதுவை போய்ச் சேர்ந்தன. இந்தியா முன்னை விட அருமையாய், நிர்ப்பயமாய், புதுவையிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/77&oldid=1539716" இலிருந்து மீள்விக்கப்பட்டது