பக்கம்:பாரதித் தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு

81


ஆகஸ்டு இதழில்தான் முதல் முதலில் விஜயா புதுச்சேரியிலிருந்து வெளிவருவது பற்றி விளம்பரம் வருகிறது. செப்டம்பர் 7-ஆம் தேதி கிருஷ்ண ஜயந்தி முதல் அதைத் தொடங்கப் போவதாக விளம்பரம் கூறுகிறது. அதற்குப் பாரதியார் ஆசிரியரானார்.

அநேகமாக இந்தியா வெளிவந்துகொண்டிருந்த வரையிலும் இப் பத்திரிகையும் நடந்து வந்திருக்கிறது.

இந்தியா 1909 அக்டோபர் 2 இதழில் கர்மயோகி என்ற பத்திரிகை வெளிவருவது பற்றிய விளம்பரம் வந்துள்ளது. ஸ்ரீ அரவிந்தர் நடத்திய கர்மயோகின் என்ற பத்திரிகையை ஒட்டித் தமிழில் பாரதியார் நடத்திய மாதப் பத்திரிகை இதுவாகும். 1909 டிசம்பர் 4-ஆம் தேதிக்கு முன்பே இப் பத்திரிகை, வெளியாகிவிட்டதாகத் தெரிகிறது. இதன் காரியாலயம் புதுவை வெள்ளாளத் தெருவில் இருந்திருக்கிறது

1909 டிசம்பர் 4.ஆம் தேதியில் வெளியான இந்திய இதழிலேயே சித்ராவளி என்ற மற்றாெரு புதிய மாதப் பத்திரிகை இந்தியா காரியாலயத்திலிருந்தே விரைவில் வெளியாகப் போவதைப் பற்றி விளம்பரம் காணப்படுகிறது. இப்பத்திரிகை வெளியாயிற்றா இல்லையா என்பது தெரியவில்லை. வெளிவந்ததாக அறிவிப்பு ஒன்றும் இந்தியாவில் நான் பார்த்த அளவில் தென்படவில்லை. பெரும்பாலும் சித்திரங்களாகவே இருக்குமாறு இதை நடத்த வேண்டுமென்பது பாரதியாரின் திட்டம். சித்திரங்களின் விளக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்குமாம்.

தமிழ் மக்களைத் தட்டியெழுப்பப் பாரதியார் கொண்டிருந்த ஆர்வத்தை 1908 ஏப்ரல் 10-ல்

பா. த.—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/81&oldid=1539700" இலிருந்து மீள்விக்கப்பட்டது