பக்கம்:பாரதித் தமிழ்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15 செப்டெம்பர் 1905


விசுவாவசு ஆவணி 31


பாரதி தமிழ்



நேற்று மாலை நடந்த கடற்கரைப் பெருங்கூட்டத்தில் மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதியார் சொல்லியவை

அங்கமே தளர் வெய்திய காலையும் அங்கோர் புன்னரி தந்திடு மூனுணுச் சிங்கமே யென வாழ்தல் சிறப்பெளுச் செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப் பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர் பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும வங்கமே யென வந்தனை வாழிநீ வங்கமே நனி வாழிய வாழிய 1

கற்பகத் தருப் போலெது கேட்பினும் கடிது நல்கிடும் பாரதநாட்டினிற் பொற்புறப் பிறந்தேம், நமக்கோர் விதப் பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம் அற்பர் போலப் பிறர்கர நோக்கியா மவணி வாழ்தலா காதென நன்கிதை வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே வங்கமே நனி வாழியவாழிய 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/88&oldid=1539796" இலிருந்து மீள்விக்கப்பட்டது