பக்கம்:பாரதித் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பாரதி தழிழ்

போனதை யெண்ணிப் புலம்பியிங் கென்பயன்? மற்றுன் நாட்டினேர் வந்ததன் பின்னர் அகத்தினிற் சிலபுண் ஆறுத லெய்தின. போர்த்தொகை யடங்கியென் னேழைப் புத்திரர் அமைதிபெற் றுய்வ ராயினர். எனவே பாரதி தேவி பழமைபோற் றிருவருள் பொழிதர லுற்றனள். பொருள்செயற் குரிய தொழிற்கணம் பலப்பல தோன்றினபின்னும் கொடுமதப் பாவிகள் குறும்பெலா மகன்றன. யாற்றினிற் பெண்களே யெறிவது உம், இரதத் துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும் பெண்டிரைக் கணவர்தம் பிணத்துட னெரித்தலும், எனப்பல தீமைகளிறந்துபட் டனவால், மேற்றிசை யிருளினை வெருட்டிய ஞான ஒண்பெருங் கதிரின் ஒரிரு கிரணமென் பாலரின் மீது படுதலுற் றனவே. ஆயினு மென்னே? ஆயிரங் கோடி தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. நல்குர வாதி நவமாந் தொல்லைகள் ஆயிர மெனேவந் தடைந்துள நூமரால். எனினுமிங் கிவையெலா மிறையவ னருளால் நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல. நோயெலா ந் தவிர்ப்பான் நுமரே யெனக்கு மருத்துவ ராக வந்தன ரென்பதுTஉம் பொய்யிலே. ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே. என்னருஞ் சேய்களு மிவருநட் பெய்தி இருபான் மையர்க்கு மின்னலொன் றின்றி ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது செவ்விதின் வாழ்க! அச் சீர்மிகு சாதியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/97&oldid=606103" இலிருந்து மீள்விக்கப்பட்டது