பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


மாடலன் ஒரு துறவி. முன்னர் உரியவன் வாயால் கண்ணகியார்

மணியானார்
அடுத்துத் தெய்வ வாயால்
மணிகள் ஆனார்.
அடுத்துத் துறவியின் வாயால் தகு மணியானார்.
மணிக்கொழுந்தும் ஆனார்.

இம்மூவர் போற்றிய மணியிலும் படிப்படியான உயர்வைக் காண்கின்றோம்.

மணியாகத் தோன்றி மாமணி ஆகியது;
மாமணி திருமா மணி ஆகியது;
திருமாமணியும் திருத்தகு மாமணி ஆகியது;
திருத்தகு மாமணியும், திருத்தகு மாமணிக் கொழுந்தாகியது.

இவ்வாறு இளங்கோவடிகளார் சிலம்பின் தலைமகளை மணிமணியாகச் சிலம்பில் பதித்தும், பெய்தும் மணி யொலிக்கும் சிலம்பாக்கியுள்ளார்.

மணி மாலை

மணிகள் ஒன்பது வகைப்படும். மணிமாலைகளில் சிறந்தது ஒன்பான் மணிமாலை (நலமணிமாலை).சிலம்பு அதனினும் ஒரு படி மேலோங்கிய மாலை. இம்மாலையின்மணிகளை ஆங்காங்கு தனித்தனியே கண்டோம். ஒரு தொகுப்பில் தொடர்ந்து காண்பது மாலையாகக் காண்பதாகும்.

51