பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உலக sum!pètinehußlöi பயன் 98

நெசவுத் தொழில், கிராமத் தொழில்கள், கப்பல் படகு கட்டும் தொழில்கள் வாணிபம், உள்நாட்டு வாணிபம், போக்குவரத்து முதலிய பலவும் சேதப்பட்டும் சிதைந்தும் மக்களுடைய வாழ்க்கை நிலை மோசமடைந்து பல்லாயிரக்கணக்கான பல லட்சக்கணக்கான மக்கள் பஞ்சங்களால் பசி பட்டினியால் செத்து மடிந்தும், கல்வியை இழந்தும், வாழ்க்கை வசதிகளை இழந்தும், சுதந்திரத்தை இழந்தும், பழைய கலாச் சாரத்தையும், பழம் பெருமைகளை இழந்தும், உலகின் முன்பாக சிறுமைப் பட்டோம்.

நாடு விடுதலை பெற்ற பின்னர், பழைய துன்ப துயரங்களையும், அடிமை வாழ்வையும் போக்கி, நாட்டு மக்கள் நல் வாழ்வு பெறுவதற்காகப் பல முயற்சிகளையும் செய்து வருகிறோம்.

  • விவசாயம், கால்நடை பராமரிப்பு, கிராமத் தொழில்களை சீரமைப்பதற்கும், பெரிய நீர்த் தேக்கங்களை நிர்மாணித்துப் பாசன வசதிகளைப் பெருக்கவும், மின்சாரம் சாலைப் போக்குவரத்து ரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து குழாய் போக்குவரத்து ஆகியவற்றை அதிகப் படுத்தவும், கல்வியை விரிவுப் படுத்தவும், உயர் கல்வியை பெருக்கவும், மற்றும் மக்கள் நல்வாழ்வை மேம் படுத்தவும் பல முயற்சிகளையும் செய்து வருகிறோம். அந்த முயற்சிகளில் பல சாதனைகளையும் பெற்று வந்திருக்கிறோம்.

ஆயினும் இன்னும் நாட்டின் ஏராளமான பிரச்னைகள் நீடிக்கின்றன. வறுமை, வேலையின்மை, படிப்பின்மை, முதலிய கஷ்டங்கள் நீடிக்கின்றன. அவைகளைப் போக்கி மக்களுக்கு நித்தியமான செளகர்யங்கள் ஏற்படுவதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

அன்னியர் ஆட்சி காலத்தில் மக்களுடைய துன்ப துயரங்கள், விடுதலை, நல்லாட்சி முதலியவைகளைப் பற்றியெல்லாம்