பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTLL LLLLL LL LLLLLL TTTT LLLLLLTTTLLLLSSK SLLLLS LLL

விவசாயிகளின் வாழ்க்கை நிலைமைகளில் அதிகமான அபிவிருத்தி ஏற்படவில்லை. அதற்கு வேறு பல காரணங்களும் குவிந்து விட்டன.

சுதேசி மன்னராட்சி முறை, ஜமீன்தாரி முறை ஆகிய ஆங்கிலேய ஆட்சியினர் உருவாக்கிய நிலப்பிரபுத்வ முறை நீக்கப் பட்டது. விவசாயிகள் நேரடியாக அங்கெல்லாம் நிலத்தின் உரிமையாளர்களாகியிருக்கிறார்கள். பல அணைகள் புதிதாகக் கட்டப் பட்டு நீர்ப்பாசன ஏற்பாடுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சாரம் வந்து விட்டது. கிராமம் தோறும் பல இடங்களிலும் டிராக்டர்கள் போன்ற நவீன உழவு கருவிகளும் எந்திரங்களும் வந்து விட்டன. ரசாயன உரங்கள் பழக்கத்திற்கு வந்து விட்டன. கிராமம் தோறும் விவசாயிகளின் கூட்டுறவு நாணய சங்கங்கள் வந்துள்ளன. கிணறுகளிலிருந்து நீர் இரைக்க விவசாய பம்பு செட்டுகள் வந்துள்ளன. விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. பணப் புழக்கமும் ரூபாய் அளவில் அதிகரித்துள்ளது. ஆயினும் கிராமப்புற மக்களின் குறிப்பாக விவசாயிகளின் கஷ்டங்கள், கடன்கார நிலை மாறவில்லை. பெரும்பாலான விவசாயிகள் கடன் சுமையால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். விவசாயச் செலவுகள் அதிகரித்துள்ளன. விவசாய உற்பத்திப் பொருள்களுக்குப் போதுமான விலையில்லை. அதனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை. கடன்கள் தீரவில்லை. ஏழ்மையும் வறுமையும் போகவில்லை. விவசாயத் தொழில் கட்டுபடியாகவில்லை. அதற்கான காரணங்களை ஆராய வேண்டியதிருக்கிறது. விவசாயப் பொருளாதாரத்தைப் பற்றித் தனி ஆய்வு தேவைப்படுகிறது.

ஒரு காரணம் வறட்சியும் வெள்ளமும் தொடர்கிறது. இந்த இரண்டு அசுரர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக அதிகமாக பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும். ரசாயன உரம் அதிகரித்து