பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கொள்கையும் செய்கையும் 118

மாநில அரசுகளின் பொறுப்பில் தான் உள்ளன. காவலர்களின் சம்பளம் உயர்த்தப் பட்டிருக்கிறது. வீட்டு வசதி முதலிய வசதிகள் அதிகப் படுத்தப் பட்டுள்ளன. தனிப்பட்ட சிலர் நல்லவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள். பல சீர்திருத்தங் -களுக்கும், போலிஸ் - பொதுமக்கள் நல்லுறவுக்கும் சில முயற்சிகள் நடந்துள்ளன. ஆயினும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்துப் போலிஸிலிருந்து, அடிப்படையில் பெரிய குணமாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தென்படவில்லை. நாட்டில் நடைபெறும் குற்றங்களில் சரி பாதிக்கு மேல் போலீஸ் அக்கிரிமெண்டுடன் நடை பெறுகின்றன என்னும் தீர்ப்புகளில் உண்மை இருக்கின்றன. அத்துடன் நாட்டில் உள்ள கிரிமினல்கள் காவல் துறையினர், அரசியல் வாதிகள் ஆகியோரின் கூட்டாட்சியும் நடைபெறுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்திய வரிக்கொள்கையை உருவகப் படுத்தி அதன் கொடுமைகளை பாரதி விவரித்துக் கூறுகிறார்.

“தன்னைப் பகலில் கொள்ளையடித்த சாவுகாரனையும், லேவாதேவி செய்யும் நிவ் கண்ட கனையும் ஏன் இரவில் கொள்ளையடிக்கக் கூடாது என்று தன்ன்ைத் தானே கேட்கலானான் என்றும், இன்னும் “குனிந்தால் வரி, நிமிர்ந்தால் வரி, நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி, கொடுக்கல் வரி, வாங்கல் வரி, வருமான வரி, தொழில் வரி, டோல்கேட் வரி, ரயில் வரி, சாக்கடை வரி, சாராயக்கடை வரி, மாட்டு வரி, நாய் வரி, பூனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, இன்னும் எண்ணமுடியாத வரிகளைப் போட்டு வீடு, வாசல், கதவு, நிலை, ஆடு, மாடு, சட்டி, பெட்டி இவைகளை ஜப்தி செய்து ஏலம் கூறிக் கொள்ளை அடித்துப் போகும் சர்க்கார் பணத்தை நாம் ஏன் திரும்பக் கொள்ளையடிக்கப் படாது? என்ற கேள்வியும் அவனுக்கு உண்டாகிறது?’ என்று பாரதி